உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

179

அரண்மனையில் பல அணிகலங்களைக் கவர்ந்த கள்வர், தாம் முன்பு வணங்கி நேர்ந்துகொண்டவாறே பிள்ளையார் கோயிற்குச் சென்று, ஒரு விலையுயர்ந்த பதக்கத்தைப் பட்டினத்தடிகள் கழுத்திற்பிள்ளை யாரென்று கருதி இட்டுச் சென்றனர்.

66

கொடுவில் எயினக் குறும்பிற் சேப்பின்

களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன

சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி

ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்."

என்னும் பெரும்பாணாற்றுப் படைப் பகுதி. (129-133), எயினரின் விருந் தோம்பற் பண்பை உணர்த்தும்.

கோவலன் விலையேறப் பெற்ற பொற்சிலம் பணிந்திருந்த கண்ணகி யோடு காட்டுவழியாய்ச் சென்றதுமன்றி, வழிப்பறித்துக் கொள்ளை கொண்டுண்ணும் வேட்டுவச்சேரியிலும் தங்கினதற்குக் காவலாயிருந்தது, கண்ணகி கற்புமட்டுமன்று, கவுந்தியடிகளின் துறவு நிலையுமாகும். மாடலன் செங்குட்டுவனிடத்தும், பராசரன் பல்யானைச் செல்கெழு குட்டுவனிடத்தும், ஏராளமாய்ப் பொன்னும் அணிகலமும் பெற்று வழிப்பறி கொடாமல் ஊர் திரும்பியதற்கும், மறையோர் (பிராமணர்) முனிவர் போற் கருதப்பட்டதே கரணியமாம்.

புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும், அவ்வப்போது வள்ளல் களிடம் பெற்ற பரிசிலைக் காட்டு வழிகளிற் பறி கொடாது வீடுகொண்டு வந்து சேர்த்ததும் கள்வரின் பண்பாட்டுத் தன்மையினாலேயே.

பொய்யா மொழிப் புலவர் தஞ்சைவாணன் மீது கோவை பாடி அரங்கேற்றி, அவன் தேவியாரிடம் நானூறு பொற்றேங்காய் பெற்றுப் பாலைநில வழியாய்ச் சென்றபோது வழிமறித்த முட்டை என்னும் வேட்டுவன், புலவனாயிருந்ததினால் பொய்யா மொழியாரின் புலமையை ஆய்ந்ததும், அவரைப் பொருளொடு விட்டதும்,

65

விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங்கொண்டல் பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினான் பொய்யா மொழிப்பகைவர் போல்.'

என்னும் விழுமிய வெண்பாவைப் பாடியதும், கருதி மகிழத்தக்கன. குட்டை, மொட்டை, என்பனபோல் முட்டை என்பதும் ஓர் இயற்பெயர்.