உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

மந்திரம் என்னும் சொல் மன் திரம் எனப் பிரியும். மன்னுதல் கருதுதல். திரம் என்பது திறம் என்பதன் பழைய வடிவம்; திரள் என்னும் சொல்லொடு தொடர்புடையது. றகரம் ரகரத்தினும் பிந்தித் தோன்றியது. அதனாலேயே, அது அதற்கினமான னகரத்துடன் நெடுங்கணக்கி னிறுதியில் வைக்கப் பட்டுள்ளது.

ரகரம் முந்தியதென்பதும் றகரத்திற்கு மூலமென்பதும், முரி - முறி (வளை), பார் பாறை, ஒளிர் -ஒளிறு முதலிய சொல்லிணைகளால் உணரப்படும்.

மன் என்னும் சொல் முன் என்பதன் திரிபு. முன்னுதல் = கருதுதல். முன்னம் = கருத்து, மனம். முன்னம் - முனம் - மனம். ஆங்கிலத்திற்கு மூலமான ஆங்கில சாகசனியத்திலும் (Anglo-Saxon) mun என்ற உகர வுயிர் வடிவமே உள்ளது. Munnan, to think, an என்பது நிகழ்கால வினையெச்ச

ஈறு.

ஆரிய மொழிக் குடும்பப் பிரிவுகளுள், ஆங்கில சாகனியத்தை அல்லது கீழ்ச் செருமானியத்தை (Low German) உட்கொண்ட தியூத் தானியம் (Teutonic), கீழையாரியத்தினும் முந்தியதும் வேத மொழியினும் அல்லது சமற்கிருதத்தினும் தமிழுக்கு நெருங்கியதும் ஆகுமென்பது, என் Primary Classical Language of the World என்னும் ஆங்கில நூலிற் காட்டப் பெற்றுள்ளது. ஆண்டுக் காண்க.

உரக முதற் சொற்கள் அகர முதலனவாக மாறுவது இயல்பே. உகை - அகை (செலுத்து).

எ=டு:

குட்டை - கட்டை

குடும்பு - கடும்பு

குடை - கடை

சுரி - சரி(வளையல்)

துணை - தனை

துதைததை

துளிர் தளிர்

நுரை-நரை

புரம் - பரம் (மேல்)

புரி - பரி(வளை)

புல்லி - பல்லி

முடங்குமடங்கு

முறி - மறி

இம்முறையிலேயே முன் என்னும் வினையும் மன் எனத் திரிந் துள்ளது. முன் என்னும் மூல வடிவம் தமிழிலும் ஆங்கில சாகசனியத்திலும் இருக்க, அதன்உயிரினம், மாந்தன்; மன்பதை = மக்கட் கூட்டம்.