உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

"முண்டை விளைபழம்”

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

முள் - முட்டு - முட்டை

(பதிற். 60:6)

முள் - (முண்) - முணம் - முணங்கு. முணங்குதல் = உள்

வளைதல்.

முணம் - முடம் = வளைவு.

முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல்.

முடங்கு-மடங்கு. முடங்கு - முடக்கு = மடக்கு.

முடம் - (முடல்) - முடலை = குறடு, உருண்டை. முண்டு - மண்டு. மண்டுதுல் = வளைதல்.

மண்டு - மண்டி, மண்டியிடல் = முழங்காலை மடக்குதல்.

மண்டு - மண்டலம், வட்டம். நாட்டுப்பகுதி, காலப்பகுதி, நூற் பகுதி.

கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் வழக்குக்களை நோக்குக.

மண்டலம் - மண்டலி, மண்டலித்தல் = செய்யுளின் எல்லா அடிகளும் அளவொத்து வருதல். ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) முதலும் ஈறும் ஒன்றித்து வருதல்.

மண்டலம் - மண்டிலம் =

1.வட்டம்

2.வட்டக் கண்ணாடி.

3.வட்டமான சுடர்.

(ஞாயிறு, திங்கள்)

4.நிலப் பகுதி.

"மண்டிலத் தருமையும்"

(தொல்.அகத்.41)

5.அளவொத்த அடிகளைக் கொண்ட

செய்யுள்.

அ - இ. அலம்-இலம்.

ஒ.நோ. அனம் - இனம். எ.டு.பட்டனம் - பட்டினம்.

-

இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை