உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சிலேற்றர் (Gilbert Slater) என்னும் சென்னைப் பல்கலைக்கழக மேனாட் பொருளியல் நூற் பேராசிரியர், தம் 'இந்திய நாகரிகத்தில் திரவிடக் கூறு' (Dravidian Element in Indian culture) என்னும் நூலில்,

"திராவிடர் இங்ஙனம் மொழியில் ஆரியப் படுத்தப் பட்டபோது, ஆரியர் நாகரிகப் பண்பாட்டில் திரவிடப்படுத்தப் பெற்றனர்" ("While the Dravidians were thus Aryanised in language the Aryans were Dravidised in culture.") என்று நடுநிலைத் தீர்ப்புக் கூறியிருப்பது, தமிழரும் திரவிடரும் மகிழ்ந்து பாராட்டற்குரியது. இத்தீர்ப்பைப் பின்வரும் நூல் வலியுறுத்தல் காண்க.

இந்திய நாகரிகம் மட்டுமன்றி உலக நாகரிகமே இந்திய ஆரியதென்று காட்டுதற்கு, வேதகாலத்தை அளவிறந்து முன் தள்ளி வைக்கும் முயற்சியொன்று இன்று வட இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. அறியப்பட்ட தம்பியின் அகவை (வயது) உயர்த்திக் கூறப்படின், அண்ணனின் அகவை தானே உயர்தல் காண்க. 5.இந்திய நாகரிகம் ஆரியர தெனக் காட்டக் கையாளப்படும் வழிகள்.

1 பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும்.

2. பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல்.

3. தமிழ்நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதக்காலத்தி னின்றும் தொடங்கல்.

4. தென்னாட்டுப் பழங்குடி மக்களாகிய தமிழரை வந்தேறி களாகவும் கலவையினமாகவுங் காட்டல்.

5. தமிழ் முன்னூல்களையும் முதனூல்களையும் பின்னூல் களாகவும் வழி நூல்களாகவும் காட்டல்.

6. குமரிக்கண்ட இடப்பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டல்.

7. கட்டுக்கதைகளையும் ஆரியச் சொற்களையும் புகுத்தி, இருபெருந் தமிழ்ச் சமயங்களாகிய சிவநெறியையும் திருமால் நெறியையும் ஆரிய வண்ணமாக்கலும், தமிழைக் கோயில் வழி பாட்டிற்குத் தகாததென்று தள்ளலும்.

8. மூவேந்தர் பேதைமையால் ஆரியம் வேருன்றிய கடைக்கழகக் கால நூல்களினின்று ஆரியச் சார்பான சான்று காட்டல்.