உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

13

9. தமிழ் வடமொழிக்கிளையென்று அயலார் கருதுமாறு, அடிப்படைத் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் வலிந்தும் நலிந்தும் வடசொன் மூலங் காட்டல்.

10. வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், வேதக்கால ஆரியப் பூசாரியரால் புகுத்தப்பட்ட ஏமாற்றுக் கருத்துக்களையும், பிறப்புத் தொடர்பான குலப்பிரி வினையையும், தொடர்ந்து போற்றல்.

11.சமயச்சார்பான சொற்பொழிவுகளாற் பொது மக்களை அறியாமையில் அமிழ்த்துதல்.

12. உண்மை கூறும் தமிழ்ப் புலவர்க்கு அலுவற் பதவியில்லாவாறு செய்தல்.

இவற்றின் விளக்கத்தை என் ‘தமிழ் வரலாறு' தமிழர் வரலாறு' ‘தமிழர் மதம்' என்னும் நூல்களுட் கண்டு கொள்க.

6.குமரிக் கண்ட இடப் பெயரும் மூவேந்தர் குடிப் பெயரும் இடப்பெயர்:

குமரி

தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடும் தென் மாவாரியில் முழுகிப்போன பெருநிலமுமான குமரிக் கண்டத்தின் தென்கோடி யடுத்து, பனிமலை (இமயம்)போலும் ஒரு மாபெரு மலைத் தொடர் இருந்தது. அதன் பெயர் குமரி. அதனாலேயே முழுகிப்போன நிலமும் குமரிக் கண்டம் எனப்பட்டது.

65

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

(சிலப்.11:19-20)

குமரி என்பது காளியின் பெயர். காளி தமிழர் தெய்வங்களுள் ஒன்று. இறவாதவள் அல்லது என்றும் இளமையாயிருப்பவள் என்னும் கருத்தில், காளியைக் குமரி என்றனர்.

கும்முதல் திரள்தல். கும்மல் - கும்மலி = பருத்தவள். கும் - குமல் - குமர் = திரட்சி, திரண்ட கன்னிப்பெண், கன்னிமை.

குமர் - குமரன் = திரண்ட இளைஞன். இளைஞனான முருகன். குமர் - குமரி = திரண்ட இளைஞை(கன்னி).

மணப்பருவமான இளமை வரும்போது உடல் திரளுதல் இயல்பு. பொலியும் பருவ விலங்குகளையும் முட்டையிடும் பருவப் பறவை களையும் விடை என்று கூறுதல் காண்க. விடைத்தல் பருத்தல்.