உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

33

தான்றி, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்னும் முப்பத்திருவகை. ஓமாலிகையும்; ஊறவைத்த நன்னீரிற் குளித்து வந்தனர்.

ஆடவர் அறிவன் (புதன்) காரியும் (சனியும்), பெண்டிர் செவ்வாய் வெள்ளியும், ஒழுங்காய் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினர். குளிப்பு நீராட்டு என்றும், தலைமுழுக்கு நெய்யாட்டு என்றும், சொல்லப்பெறும். நெய்யாட்டில் எண்ணெயையும் உடம்பழுக்கையும் போக்க, சீயற்காய் அரையல், அரைப்பு அரையல், உசிலைத் தூள், பாசி (பச்சை)ப் பயற்றுமா, களிமண் முதலியவற்றைப் பயன்படுத்தினர்.

சீயற்காய் அல்லது சீக்காய் என்பது, அழுக்கைப் போக்குங் காய் என்று பொருள்படுவது; சிகைக்காய் என்பதன் மரூஉ அன்று.

சீத்தல் = 1. துடைத்தல்.

"மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப

2.போக்குதல்.

"

(மதுரைக்.685).

"இருள்சீக்குஞ் சுடரேபோல்

99

(கலித். 100: 24).

3. துப்புரவாக்குதல் (சூடா).

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்

சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே

கூழைக் கேர்மன் கொணர்கஞ் சேறும்"

என்னும் குறுந்தொகைச் செய்யுள் (113), பண்டைத் தமிழ் மகளிர் ஊருக்கணித்தான குடிநீர்நிலையிற் குளிக்காமல் சற்று அப்பாலுள்ள காட்டாற்றிற்குச் சென்று குளித்ததையும், கூந்தலழுக்குப் போக்கக் களிமண் எடுத்துச் சென்றதையும், கூறுதல் காண்க.

இரு பாலாரும் குளித்தவுடனும் தலைமுழுகியவுடனும், வெளுத்த துவர்த்து, முண்டினால் தலையையும் உடம்பையும் துவர்த்தி, வெளுத்தாடை அல்லது புத்தாடை யுடுப்பர். மாற்றாடை யில்லாவிடின், முன்பு அணிந் திருந்த ஆடையைத் துவைத்துக் கொள்வர்.

பெண்டிர் காரகிற் புகையாலும் சந்தனக் கட்டைப் புகையாலும் தம் கூந்தலின் ஈரம் புலர்த்துவர்.

காலையிற் குளிப்பினும் குளியாவிடினும், பல் துலக்காமல் ஒருவரும் உண்பதில்லை.