உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

55

புலவுநாற்றத்த பைந்தடி

பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்றுவை

கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும் மெல்லிய பெரும் தாமே......

......

..........

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே."

39

என்று கூறிய விடையால் (புறம்.14:12-19), கடைக்கழகக் காலத்துப் பிராமணனும் ஊனுண்டமை அறியப்படும்.

66

நெய்கனி குறும்பூழ் காய மாக

ஆர்பதம் பெறுக தோழி யத்தை

பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்

நன்றே மகனே யென்றனன்

நன்றோ போலும் என்றுரைத்தோனே."

என்பதில், நெய்யிற் பொரித்த குறும்பூழ்க் கறி கூறப்பட்டது.

(குறுந்.389)

குறும்பூழ் வேட்டுவன் 214-ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டான். குறும்பூம் காடை. மனைக்கோழி 395-ஆம் புறப்பாட்டிற் குறிக்கப் பட்டுள்ளது. ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைத்தமிழர் சுவையுள்ளதென விரும்பியுண்டனர்.

"மாடந் தோறும் மைவிடை வீழ்ப்ப

(புறம்.33).

"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்"

(புறம் 113).

"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்"

(புறம் 262).

"மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்தி”

(புறம் 365).

“விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப”

"மரந்தோறும் மைவீழ்ப்ப

"மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி”

  • செங்கண் மழவிடை கெண்டி”

மை = காராடு, வெள்ளாடு. விடை = கடா, வெள்ளாட்டுக் கடா.

இக்காலத்தில் மரக்கறி வகையைச் சேர்ந்த மோர்க் குழம்பு,

அக்காலத்தில் ஊன்கறி வகையாகவும் இருந்தது.

(புறம் 366).

(மதுரைக் காஞ்சி, 754).

(பெரும்பாண்.143).

(பெரும்பொருள் விளக்கம்).