உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

திண்மை நிலைபற்றி நீர், சாறு, தீயல், இளங்குழம்பு, குழம்பு, கூட்டு எனக் குழம்பு பலவகைப்படும், சோறும், சருக்கரைப் பொங்கல் (அக்காரடலை, அக்கார வடிசில்), வெண்பொங்கல், மிளகுப் பொங்கல், நெய்ப்பொங்கல், தேங்காய்ச் சோறு, பாற்பொங்கல், கடும்புச் சோறு ஊன்சோறு (புலவு), ஊன்றுவையடிசில் எனப் பலவகைப்படும்.

ஊன் சோறு அல்லது புலவு பண்டைக் காலத்தில் தமிழகத்திலேயே தோன்றிப் பின்பு வழக்கற்றது; முகம்மதியர் வந்தபின் அவரிடமிருந்து புதிதாய்க் கற்றுக் கொண்டதன்று.

மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும் அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி'

6760T MILD (113),

66

புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்துகண் டன்ன

ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்

செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை"

என்றும் (33), வரும் புறப்பாட்டடிகளைக் காண்க.

66

அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்"

என்பது (புறம்.360:17), புலவின் சிறப்பு வகையாகத் தோன்றுகின்றது.

இறைச்சி வகைகளுள் உடும்பிறைச்சியைத் தலை சிறந்ததாகத் தமிழர் கொண்டமை, "முழுவுடும்பு, முக்காற்காடை, அரைக்கோழி, காலாடு என்னும் பழமொழியால் தெரிய வருகின்றது.

உடும்பிழு தறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றில் கூறுசெய் திடுமார் கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்

மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து"

என்னும் புறப் பாட்டடிகளும் (325:7-10),

"நாய்கொண்டால், பார்ப்பாரும் தின்பர் உடும்பு”

என்னும் பழமொழி நானூற்றடியும் (35), இதை வலியுறுத்தும்.

சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கையைப் பிடித்து, “உம் கை மெல்லிதாயிருக்கிறதே! கரணியம் என்ன?” என்று வினவியதற்கு, அவர்,