உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

37

புளிப்பும், மாதுளங்காய் அல்லது கச்சல் துவர்ப்பும், உப்பேறி உவர்ப்பும், ஆகும். இத்தகைய உண்டி, தமிழரின் சுவை முதிர்ச்சியையும் தலைசிறந்த நாகரிகத்தையும் மருத்துவ அறிவையும் உடல்நல வுணர்ச்சியையும் ஒருங்கே காட்டும். அறுசுவையுள்ளும் தமிழர்க்குச் சிறந்தவை இனிப்பும் புளிப்பும் ஆகும். இது வெப்ப நாட்டியல்பு.

66

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.'

என்னும் குறுந்தொகைச் செய்யுளும் (164)

" வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ

ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை”

(215)

புறவுக்கரு வன்ன புன்புல வரகின்

பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொடு

அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு"

(34)

66

பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்

அளவுபு கலந்து மெல்லிது பருகி"

(381)

என்னும் புறப்பாட்டடிகளும் இங்குக் கவனிக்கத்தக்கன. புன்கம்=சோறு. மிதவை =கூழ்.

தமிழர் விருந்துள் தலைசிறந்தது திருமண விருந்து. அதிற் பதினெண் வகைக் கறியும், கன்னலும் (பாயசம்) படைக்கப்பெறும். பதி னெண் வகைக் கறிகள்: அவியல்(உவியல்), கடையல், கும்மாயம், கூட்டு (வெந்தாணம்), துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி (ஆ ணம்), அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உழுந்து வடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பன.

கும்மாயம் குழைய வெந்த பருப்பு, அல்லது பயறு. வெந்தாணம் (வெந்த ஆணம்) என்பது இன்று வெஞ்சணம் என மருவி வழங்கு கின்றது. இதை வடமொழியாளர் கடன்கொண்டு வ்யஞ்சன என்று திரித்தும், வ்ய+அஞ்சன என்று பிரித்தும், உத்திக்குப் பொருந்தாத பொருள் கூறியும், வட சொல்லாகக் காட்டுவர்.