உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

பச்சரிசி, புழுங்கலரிசி என்னும் இரு வகையுள், தமிழர் விரும்பியது பின்னதே. அது சூட்டைத் தணிப்பதனால் வெப்பநாட்டிற் கேற்றதாகும்; குழம்பின் சுவையையும் மிகுத்துக் காட்டும். அதற்காவே, அதற்குரிய தனி முயற்சியை மேற்கொண்டனர். அதனால் ஏற்படும் வலுக் குறைவிற்குக் கறி வகைகளாலும் நெய்யாலும் ஈடு செய்யப் பெறும்.

"இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த

அவைப்புமாண் அரிசி அமலைவெண் சோறு" (சிறுபாண். 193-4) என்பது, தூய வெள்யைாய் அரிசி தீட்டப்பட்டதைத் தெரிவிக்கும்.

பொதுவாக, காலைச் சிற்றுண்டியும் நண்பகல் மாலைப் பேருண்டியும் ஆக மூவுண்டிகளே பண்டைத் தமிழர் உண்டு வந்தனர்.

காலையுணவும் நண்பகலுணவும், உழவர்க்கும் கூலியாளர்க்கும் பழஞ்சோறும் பழங்கறியும் ஊறுகாயுமாகும். புதுக் கறியாயின் நெருப்பில் வாட்டியதும் துவையலுமாயிருக்கும். இராவுணவே அவருக்குப் புதுச் சமையலாகும்.

66

மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டுக்

குறுமுயலின் குழைச் சூட்டொடு

நெடுவாளைப் பல்லுவியற் பழஞ்சோற்றுப் புகவருந்தி"

என்பது புறம் (395)

உழவர் மங்கல வினைநாளும் விழா நாளும் விருந்து நாளும் போன்ற சிறப்பு நாளிலன்றி மூவேளையும் நெல்லரிசிச் சோறுண் பதில்லை. வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய அவ்வக்காலத்து விளைந்த தவசத்தையே அவ்வக்காலத்துப் பகலுணவாய் உண்பர்.

இல்லத்திலும் நிழலிலுமிருந்து வேலை செய்வோரெல்லாம், பெரும் பாலும், காலையிற் பழையதும் நண்பகல் மாலையிற் சுடுசோறும், உண்பர். அரசரும் செல்வரும் எல்லா நாளும், பிறரெல்லாம் சிறப்புநாளும் காலையிற் பலகாரமும் பொங்கலும் போன்ற சுடு சிற்றுண்டி வகைகளை உண்பர்.

இருவேளைப் பேருண்டிகளுள், தமிழர்க்குச் சிறந்தது நண்பகலதே. குழம்புச் சோறும், மிளகு நீர்ச்சோறும், மோர் அல்லது தயிர்ச் சோறும் என, முக்கடவையுள்ளது பேருண்டி. அதை அறுசுவை யுண்டி யென்பது வழக்கு. முக்கனிகளுள் ஏதேனுமொன்று இனிப்பும், பாகற்காய் அல்லது சுண்டை வற்றல் கசப்பும், காரவடை உறைப்பும், புளிக்கறியும் தயிரும் ஊறுகாயும்