உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

தீட்டுள்ள பெண்டிர்

“கலந்தொடா மகளிர்”

எனப்படுவர்.

3.ஊண்

(புறம்.299)

35

உலகில் முதன் முதல் உணவை நாகரிகமாய்ச் சமைத்துண்டவன் தமிழனே. ஏனைய நாட்டாரெல்லாம், தம் நாட்டில் விளைந்த உண வுப் பொருள்களைப் பச்சையாகவும் சுட்டும் வெறுமையாய் அவித்தும் உண்டு வந்த காலத்தில் உணவைச் சோறும் கறியும் என இரண்டாக வகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்தும், கறி அல்லது குழம்பு வகைகளை, சுவையூட்டுவனவும் உடம்பை வலுப்படுத்துவனவும் நோய் வராது தடுப்பனவுமான பலவகை மருந்துச் சரக்குகளை உசிலை (மசாலை) யாகச் சேர்த்து ஆக்கியும், உயர்வாக உண்டு வந்த பெருமை தமிழனதாகும்.

காய் வகைகளைக் காம்பு களைந்து சீவ வேண்டுபவற்றைச் சீவிக் கழுவியும்; பித்தமுள்ளவற்றை அவித்திறுத்தும்; மஞ்சள், மிளகு அல்லது மிளகாய்வற்றல், சீரகம், கொத்துமல்லி, தேங்காய் முதலியவற்றை மை போல் அரைத்துக் கலந்தும்; இஞ்சி, வெங்காயம் வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கராம்பூ(கருவாப்பூ), கருவாப் பட்டை, ஏலம், சோம்பு முதலியவற்றை வேண்டுமளவு சேர்த்தும்; வெந்தபின் புளி அல்லது எலுமிச்சஞ்சாறு விடவேண்டியவற்றிற்கு விட்டும்; கடுகு, கறிவேப்பிலை முதலியன தூவி ஆவின் நெய்யில் தாளித்தும், முதன் முதற் குழம்பு காய்ச்சப்பெற்றது தமிழகத்திலேயே. தாளிப்பு இலக்கிய வழக்கில் குய் எனப்படும். "குய்யுடை யடிசில் " (புறம். 127).

று

உலகில் அரிசியுள்ள தவசங்களிற் பலவகையுள்ளன. அவற்றுள் நெல்லரிசிச் சோறுபோல் வேறொன்றும் சுவையாய்க் குழம்பொடு பொருது வதில்லை. தமிழகத்திலேயே, காடைக் கண்ணியரிசி, குதிரை வாலியரிசி, சாமையரிசி, தினையரிசி, வரகரிசி என ஐவகை யரிசி யுள. அவை நெல்லரிசிக்கீடாக. கம்பும் சோளமும் கஞ்சுயும் கூழுமே சமைத்தற்குதவும். கேழ்வரகால் களியும் கூழும்தான் ஆக்க முடியும். கோதுமை, வாற்கோதுமை போன்ற பிற நாட்டுத் தவசங்கள் (தானியங்கள்), அப்பமும் (ரொட்டியும்) சிற்றுண்டியும்தான் அடவும் சுடவும் ஏற்கும்.

நெல்லரிசியுள்ளும் பலவகையுள. அவற்றுள் தலைசிறந்தது சம்பா. அதுவும் அறுபது வகைப்பட்டதாம். அவற்றுட் சிறந்தன சீரகச் சம்பாவும் சிறுமணிச் சம்பாவும்.