உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

43

நாட்படாத இயற்கைக் கள்ளை உடலுழைப் பாளிகள் வெறி யுண்டாகாவாறு அளவாக உண்பதாற் கேடில்லை யென்பதும் நன்றென்பதும், ஆராய்ச்சியாளர் கருத்து. வேனிற் கால காலத்திற்குக் குளிர்ச்சியான பனங்கள்ளையும் மாரிக் காலத்திற்கு வெப்பமான தென்னங் கள்ளையும், இயற்கை வகுத்திருப்பது கவனிக்கத் தக்கது.

4.உடை

தமிழகத்திற் பழங்காலத்திலேயே நெசவு தோன்றி விட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வயவர் யோவான் மார்சல் (Sir John Marshall) தம்‘மொகொஞ்சோ-தாரோவும் சிந்து நாகரிகமும் (Mohenjo-Daro and the Indus Civilization) என்னும் நூலில் கி.மு.3000 ஆண்டுகட்கு முன் மேனாடு கட்கு இந்தியாவினின்றே துணி ஏற்றுமதியானதென்று கூறியிருக்கின்றார். அக்காலத்திந்தியா தமிழகமே.

பருத்தி தொன்று தொட்டுத் தென்னாட்டில் விளைந்து வருகின்றது. மூதாட்டியரும் கைம் பெண்டிரும் பண்டைக் காலத்தில் மேற்கொண்ட தொழில்களுள் பெருவழக்கானது நூல்நூற்றல். அதனால் அவர் பருத்திப் பெண்டிர் எனப்பட்டார்.

66

66

பருத்திப் பெண்டிர் பனுவலன்ன"

ஆளில பெண்டிர் தாளிற் செய்த

நுணங்குநுண் பனுவல்”

பஞ்சிதன சொல்லாப் பனுவல் இலையாகச்

செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத

கையேவா யாகக் கதிரே மதியாக

மையிலா நூனமுடியு மாறு

பனுவல் =நூல்

(புறம் 125:1).

(நற்.353)

(நன்.பாயிரம்).

"நூற்பதற்குப் பஞ்சைச் சுருளாகத்திரட்டி வைப்பதனால், நூல் நூற்றலைக் கொட்டை நூற்றல் என்பது வழக்கு. நூற்குங் கருவி, சுற்றும் சக்கரமுடைமையால் இறாட்டு அல்லது இறாட்டை எனப்பட்டது.

இறத்தல் = வளைதல், இறகு = வளைந்த தூவு.

=

இறவு = கூரையின் சாய்ப்பு, இற - இறப்பு = கூரையின்சாய்ப்பு. இது இறவாணம், இறவாரம் என்றும் சொல்லப்படும். இறவு - இறவுள் மலைச்சரிவு.