உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

சட்கொண்டிக் குடிப்பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப்பொருந்

99

(மதுரைக்.135-138)

66

மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம்பெருந்துறை முத்தின் அன்ன”

(அகம். 27:8-9)

66

இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்

கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்

நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை”

(அகம்.130:9-11)

வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்

புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை

அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து

(அகம். 201:3-5)

66

இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனப் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்

(அகம், 350:10-13)

காண்டொறுங் கலுழ்த லன்றியும் ஈண்டுநீர் முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை”. "தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

(நற்.23:5-6)

(பட்டினப்.189).

அணிகலத்திற்குரிய பொன், இயற்கையாகத் தூயதும், புடமிடப் பட்டுத் தூயதாக்கப் பெற்றதும், என இருவகை. இவற்றுள் முன்னது ஓட்டற்ற பொன் எனப்படும்.

"ஓட்டற்ற செம்பொன் போலே”

"மாற்றறியாத செழும் பசும் பொன்”

(ஈடு, 1,10,9)

என்று இராமலிங்க அடிகள் கூறியதும் இதுவே.

புடமிடப்பட்டது மாற்றுயர்ந்த பொன் எனப்படும். பத்தரை மாற்றுத் தங்கம் சிறந்த தெனக் கூறுவது உலகவழக்கு. தாயுமான அடிகள் இதைப் பத்துமாற்றுத்தங்கம் என்பர்.

"பத்துமாற்றுத் தங்க மாக்கியே பணிகொண்ட”

(சின்மயா.7)

அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னும் உள்ளதாக நூல்கள் கூறும்,