உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

"ஆயிரத்தெட்டு மாற்றின் அபரஞ்சி

51

மச்சபு.தாரகாசுரவ 26).

"அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு."

என்றொரு பிற்காலப் பழமொழியும் உளது.

பொன்னின் மாற்றுரைக்குங் கல் கட்டளைக்கல் என்றும், உரைக்கும் கம்பி உரையாணி என்றும், பெயர் பெற்றன.

மாதவி, விரலணி (கான் மோதிரம்), பரியகம் (காற்சவடி), நூபுரம் (சிலம்பு), பாடகம், சதங்கை, அரியகம் (பாத சாலம்), குறங்குசெறி (கவான்செறி), விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை), தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வளை), பரியகம் (பாசித்தாமணி, கைச்சரி), வால்வளை (சங்க வளை, வெள்ளிவளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணிமோதிரம், மரகத்தாள் செறி (மரகதக் கடைசெறி), சங்கிலி (மறத் தொடரி), நுண்ஞாண், ஆரம்,கயிற்கடை யொழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக்கடிப்பிணை (நீலக்குதம்பை), தெய்வவுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பாளை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும்

வடபல்லி-யும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடு காதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறுசில அணிகலம் அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று சூடை அல்லது சூடாமணி. பெண்டிர் அரைப் பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை, என ஐவகைப்பட்டிருந்தது.

66

எண்கோவை காஞ்சி எழுகோவை மேகலை

பண்கொள் கலாபம் பதினாறு-கண்கொள்

பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு விரிசிகை யென்றுணரற் பாற்று.

என்பது பழஞ் செய்யுள்.

இக்கால அணிகளே ஏறத்தாழ ஐம்பது வகைப்பட்டிருப்பதால், முதன்மையான அணியினையே இளங்கோவடிகள் குறித்திருத்தல் வேண்டும். இக்காலத்து அரைப்பட்டிகை ஒட்டியாணமாகும். இங்ஙனமே சில அணிகள் வடிவும் பெயரும் மாறியுள.

இக்காலத்துப் பாண்டி நாட்டுப் பழ நாகரிக மகளிர் போல், அக்காலத்தில் எல்லாத் தமிழப் பெண்டிரும் காது வளர்த்திருந்தனர். காது வளர்க்கும்போது அணிவது குதம்பையும், வளர்த்தபின் அணிவது குழையும் கடிப்பிணையுமாகும். குதம்பை இன்று குணுக்கு என வழங்குகின்றது.

"கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்'

"

(சிலப். 4:50)