உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

66

வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள்ளூன்வாடிய உணங்கல் போன்றன"

என்பன காண்க.

(LD600fl.20: 53-4)

அக்காலத்தில் ஆடவரும் அணிகலன் அணிவது பெருவழக்கு. வணிகர் காதிற் குண்டலமும் தோளில் (புயத்தில்) கடகமும், மார்பில் மணிக் கண்டிகையும், அணிந்திருந்தனர். பிற வகுப்பார் காதிற் கடுக்கனும், கையிற் காப்பும் அணிந்திருந்தனர். கடுக்கனைப் பின்பற்றியே பிற்காலக் கமலம் (கம்மல்) என்னும் மகளிர் காதணி எழுந்தது. மறவர் தோளிற் கடகமும் காலிற் கழலும் அணிந்திருந்தனர். கழல் பிற்காலத்தில் வெண்டையம் எனப்பட்டது. கைமோதிரம் இரு பாலார்க்கும் பொதுவாம்.

அரசர், பாணனுக்குப் பொற்றாமரையும். அவன் மனைவியாகிய பாடினிக்கு அல்லது விறலிக்குப் பொன்னணிகலமும், பரிசிலாக அளித்து வந்தனர். விறலி விறல் (சத்துவம்) பட ஆடுபவள். விறல் உள்ளக் குறிப்பால் உடம்பில் தோன்றும் வேறுபாடு. அவை கண்ணீர் வார்தல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.

13-ஆம் நூற்றாண்டில் பாண்டி நாட்டைப் பார்க்க வந்த மார்க்கோபோலோ என்னும் வெனீசுநகர வணிகர், சுந்தரபாண்டியன் தன்கழுத்தில் விலைமதிக்க வொண்ணாத பன்மணி மாலையும், மார்பில் விலையேறப் பெற்ற இருமணியாரமும், தோளில் மூன்று பன்முத்தக் கடிகையும், காலிற் கழலும், கால் விரல்களில் மோதிரமும் அணிந்திருந்த தாகக் கூறியுள்ளார்.

66

மைதீர் பசும்பொன் மாண்ட மணியழுத்திச்

செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும்.'

என்னும் நாலடிச் செய்யுளால், பண்டை மூவேந்தரின் செருப்பு எத்தகைய தாயிருக்கும் என்பதை உய்த்துணரலாம்.

மயிலுக்குத் தோகைபோலப் பெண்டிர்க்குக் கூந்தல் அழகு தருவதால், அக்காலத்து பெண்டிர் தம் கூந்தலை நன்றாய்ப் பேணி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள், முடி என்னும் ஐவகையில் அழகு பெற முடித்து வந்தனர். அவை ஐம்பால் எனப்படும். அவற்றைக் குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என நச்சினார்க்கினியரும்; சுருள், குரல், அளகம், துஞ்சு, குழல், கொண்டை எனச் சாமுண்டி தேவநாயகரும்; சிறிது வேறுபடக் கூறுவர். கூந்தலுக்கு மணம் இயற்கை என்னும் அளவிற்கு நறுமணம்