உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

53

ஊட்டுவது ஒருதனிக் கலையாயிருந்தது. "நாறைங் கூந்தல்" என்றார் இளங்கோவடிகளும் (சிலப். 10:43).

66

பெண்டிர் தம் கண்ணிற்கு மை யூட்டுவது பெரு வழக்கமாயிருந்தது.

எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.”

என்னும் குறள் (1285) இதைத் தெரிவிக்கும். மையூட்டுவதன் பெருவழக் கினால், உண்கண் என்னுந் தொடரே மையுண்ட கண்ணைக் குறிக்கும்.

இருநோக் கிவளுண்கண் ணுள்ளது”

(குறள் 1091).

மையூட்டல் கண்ணிற்கு அழகு மட்டுமன்றிக் குளிர்ச்சியும் தருமென்பது, அறிஞர் கருத்து.

இக்காலத்து மேனாட்டுப் பெண்டிர் போல், அக்காலத் தமிழ்ப் பெண்டிரும் தம் உதடுகட்குச் செஞ்சாயம் ஊட்டி வந்தனர். அது அவரழகைச் சிறப்பித்ததனால் பெண்டிரழகை வர்ணிக்கும் இடமெல்லாம் “இலவிதழ்ச் செவ்வாய்" (சிலப் 14:136) என்றும். "கொவ்வைச் செவ்வாய் (திருவாச.6:2) என்றும்," துப்புறழ் தொண்டைச் செவ்வாய்" (சீவக. 550) என்றும், பிறவாறும், கூறுவது புலவர் வழக்கமாயிற்று.

இனி, உள்ளங்காற்கும் செந்நிறம் பெறச் செம்பஞ்சுக் குழம்பு ஊட் வந்தமை.

டி

"அலத்தக மூட்டிய அடி” (மணி. 6:110) என்பதால் அறியலாம். அலத்தகம் செம்பஞ்சுக் குழம்பு.

மகளிர் மார்பிலும் தோளிலும் காதலர் சந்தனக் குழம்பால் வரையும் ஓவியங்களும், இருபாலாரும்நெற்றியிலும் கையிலும் குத்துவிக்கும் பச்சைக் கோலமும், ஓவிய வுணர்ச்சியை யன்றி நாகரிகத்தைக் காட்டா.

6.உறையுள்

உறையுள் என்பது குடியிருக்கும் வீடு.

குறிஞ்சிநில வாணரான குறவர் குன்றவர், இறவுளர் முதலிய வகுப்பாரும், பாலைநில வாணரான மறவர், எயினர், வேடர் முதலிய வகுப்பாரும், இலைவேய்ந்த குடிசைகளிலும் குற்றில்களிலும்; முல்லைநில வாணரான இடையர் கூரை வேய்ந்த சிற்றில்களிலும் மருதநிலச் சிற்றூர் வாணரான உழவர். மண்சுவர்க்கூரை வீடுகளிலும்; வதிந்தாரேனும்; மருதநிலப் பேருர் வாணர் ஏந்தான (வசதியான) பச்சைச் செங்கற் சுவர்க் கூரை வீடுகளிலும் சுட்ட செங்கற்சுவர்க் காரை வீடுகளிலும்