உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

வாழ்ந்துவந்தனர். சுட்ட செங்கல் சுடுமண் என்றும் சுடுமட் பலகை என்றும் சொல்லப் பட்டது. பச்சைச் செங்கல் மட்பலகை யெனப்பட்டது.

"சுடுமண் ஒங்கியநெடுநகர் வரைப்பில்”

(பெரும்பாண்.405)

  • சுடுமட் பலகைபல கொணர்வித்து ”

(பெரியபு.ஏயர்கோன். 49)

சிறு செங்கல் இட்டிகை எனப்பட்டது.

"கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர்"

(பழ. 108)

இட்டிது = சிறிது (குறள். 478). இட்டிமை = சிறுமை (திவா,). இட்டிய = சிறிய (ஐங்குறு. 215).

=

இட்டிகை என்பது, வடமொழியில் இஷ்டிகா என்று திரிந்து தன்சிறப்புப் பொருளையிழந்து, செங்கல் என்று மட்டும் பொருள்படும்.

சிறியதும் பெரியதும் உயர்ந்ததும் தாழ்ந்ததும் அல்லாது நடு நிகர்த்தான உறையுள், குடி, மனை, இல், வீடு என்னும் சொற்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். இல்லம், வளமனை, மாளிகை, நகர் என்பன, பெருஞ் செல்வர் வாழும் சிறந்த உறையுளைக் குறிக்கும். அரசர் வாழும் மாளிகை அரண் பெற்றிருக்குமாதலால், அரண்மனையெனப் பெறும்; அரசன் மனை என்னும் பொருளிற் கோயில் என்றும் சொல்லப்பெறும்.

குடி, நகர், மாளிகை என்னும் தூய தமிழ்ச் சொற்கள் வடமொழிச் சென்றும் வழங்குகின்றன. ஆயின், வடமொழியாளர் உண்மையை ஒப்புக்கொள்ளும் நேர்மையரல்லர்.

மேனிலையுள்ள வீடு மாடம் எனப்பட்டது. அது உலக வழக்கில் மாடி வீடு எனவும் மெத்தை வீடு எனவும் வழங்கும். இருநிலை முதல் எழுநிலை வரை அக்காலத்து மாடங்கள் கட்டப்பட்டன.

"இன்அகில் ஆவிவிம்மும் எழுநிலைமாடஞ் சேர்ந்தும்" (சீவக.2840)

ஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச் சுவர், முக மண்டபம், தலைவாசல், இடைகழி, (நடை) முன்கட்டு, உள் முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப் புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கக்கூசு), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடைய தாயிருந்தது. மேனிலையில் நிலாமுற்றமிருந்தது.

66

வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்

சில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்"

என்னும் மதுரைக் காஞ்சி அடிகட்கு (357-8),