உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

55

"மண்டபம் கூடம் தாய்க்கட்டு அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார்” என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை வரைந்திருத்தல் காண்க:

வணங்

கு

-

அளை.

வாங்கு - வங்கு - அங்கு. ஒ.நோ: வளை அங்குதல் = வளைதல், சாய்தல், அங்கு - அங்கணம். ஒ.நோ: சாய்கடை சாக்கடை.

காற்று வரும்வழி, காலதர், சாளரம், பலகணி என்னும் பெயர்களைப் பெற்றிருந்தது.

காரை வீடுகள் உச்சியில் ஒடு வேய்ந்ததும் மச்சுப் பாவியும் இருவகையா யிருந்தன. ஓடும் இலக்கிய வழக்கில் சுடுமண் எனப் பட்டது.

66

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்

முடியர சொடுங்கும் கடிமனை”

என்பதற்கு (சிலப்.14:146-7) 'ஓடு வேயாது பொற்றகடு வேய்ந்த மனை’ என்று அருஞ்சொல்லுரைகாரர் ஓர் உரை வரைந்திருப்பது கவனிக்கத் தக்கது. முடி வேந்தரும் விரும்பும் நாடகக் கணிகையர் மனைகளாதலின். பொற்றகடு வேய்ந்ததாகவும் இருந்திருக்கலாம். காஞ்சி நகரிற் பலர் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப்பட்டிருந்ததாக மணிமேகலை கூறுதல் காண்க.

"சாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும்"

(LD 60fl. 28: 66)

"மழைதோயும் உயர்மாடத்து”

என்னும் பட்டினப்பாலை (145) யடியும்,

66

மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்

கூடம் மரத்திற்குத் துப்பாகும்."

என்னும் பழமொழிச் செய்யுளும் (71) மாடத்தின் பெருமையை உணர் ர்த்தும்.

7.ஊர்தியும் போக்குவரத்தும்

ஊர்தல் ஏறிச் செல்லுதல், ஊர்தி ஏறிச் செல்லுங் கருவி.

நிலவூர்திகள் அணிகம் வண்டி, விலங்கு என மூவகைப்படும்.

அணிகம், சிவிகை, பல்லக்கு, மேனா, சப்பரம் என்பன.

சிவிகை, இருவர் காவிச் செல்லும் கூண்டுப் பல்லக்கு. பல்லக்கு எண்மருக்குக் குறையாது தோளில் தாங்கிச் செல்லும் திறந்த