உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

தண்டையப் படைப் பல்லக்கு. சப்பரம் உருளியின்றி ஒற்றைத் தட்டுள்ள சப்பை (மொட்டை)த் தேர்.

சிவிகை என்பது சிபிக்கா என்றும், பல்லக்கு என்பது பர்யங்க என்றும், வடமொழியில் திரியும். சப்பரம் இன்று தெய்வப் படிமையைக் கொண்டு செல்லவே பயன்படுத்தப் பெறும்.

வண்டி: சகடம், கூடாரப்பண்டி, கொல்லாப் பண்டி, வையம், பாண்டில், வங்கம், தேர் என்பன. சகடம் பொதுவகையான மாட்டு வண்டி, கூடாரப் பண்டி கூண்டு வண்டி. கொல்லாப் பண்டி சிறந்த காளைகள் பூட்டப் பெற்றதும் பெருமக்கள் ஏறிச் செல்வதுமான நாகரிகக் கூண்டு வண்டி, வையம் இரு குதிரை பூண்டிழுக்கும் தேர் போன்ற வண்டி. பாண்டில் ஈருருளியுள்ள குதிரை வண்டி. வங்கம் பள்ளியோட வண்டி: அது பள்ளி யோடம் போன்றது. தேர் இக்காலத் தேர் போற் சிறியது.

என்பன.

விலங்கு: காளை, கதிரை, கோவேறு கழுதை, யானை, ஒட்டகம்

நீரூர்திகள்: புணை, பரிசல், கட்டுமரம், ஓடம், அம்பி, திமில், பஃறி, தோணி, படகு, நீர்மாடம் (பள்ளியோடம்) நாவாய் (கப்பல்) என்பன. நாவாய், வங்கம், கப்பல் என்பன சிறிது வேறுபட்டவையாயு மிருக்கலாம்.

தமிழ் நாட்டிலும் வட நாடுகளிலுமுள்ள பேரூர் கட்கும் கோ நகர் கட்கும், தடிவழி என்னும் பெருஞ்சாலைகள் சென்றன. இச்சாலைகள் காடுகளிற் கூடும் கவர்த்த இடங்களில், அவ்வந் நாட்டு வேந்தனின் விற்படைகள், வணிகச் சாத்துக்கட்கு வழிப்பறிக்கும் கள்வராலும் கொள்ளைக்காரராலும் பொருட்சேதமும் ஆட்சேதமும் நேராவாறு இரவும் பகலும் காத்து நின்றன.

66

உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்

....

அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்

உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

வில்லுடை வைப்பின் வியன்காட் டியவின்” (பெரும்பாண். 76-82) என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டை நாட்டைப் பற்றிக் கூறுதல் காண்க.

நாடு கைப்பற்றற்கும் வாணிகத்திற்கும் அயல்நாடு பார்த்தற்கும், அரசரும் வணிகரும் பொது மக்களும் செல்லக் கூடிய நாவாய் என்னும் பெருங்கலங்கள், கீழ்கடலிலும் மேல்கடலிலும் அடிக்கடி சென்று கொண்டிருந்தன.

,