உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

வாணியைந்த இருமுந்நீர்ப் பேஎநிலைஇய இரும் பவ்வத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர

நெடுங்கொடி மிசையிதையெடுத் தின்னிசை முரசமுழங்கப்

பொன்மலிந்த விழுப்பண்டம்

நாடார நன்கிழிதரும்

ஆடியற் பெருநாவாய்

மழைமுற்றிய மலைபுரையத்

துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச்

சீர்சான்ற வுயர்நெல்லின்

ஊர்கொண்ட வுயர்கொற்றவ்.

57

என்று மதுரைக் காஞ்சி (75-88), வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சாலி (சாவக)த் தீவைக் கைப்பற்றியதை, அவன்வழித் தோன்றலான தலையாலங் கானத்துச்செரு வென்றநெடுஞ்செழியன் மீது ஏற்றிக் கூறுதல் காண்க.

66

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியாற் கரைசேர்க்குந்து

மலைத்தாரமும் கடற்றாரமும்

தலைப்பெய்து வருநர்க்கீயும்

முழங்குகடல் முழவின் முசிறி யன்ன”

புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

என்பது வணிகம் பற்றியது.

66

சாதுவன் என்போன் தகவில னாகி

(புறம் 343:5-10)

வங்கம் போகும் வணிகர் தம்முடன்

தங்கா வேட்கையின் தானும் செல்வுழி"

என்பது, (மணி.16: 4-12) அயல் நாடு காணச் சென்றமை பற்றியது. 8.வாழ்க்கை வகை

படும்.

உலகவாழ்க்கை, இல்லறம் துறவறம் தனி வாழ்க்கை என மூவகைப்

ஒரு கற்புடைப் பெண்ணை மணந்து இல்லத்திலிருந்து அறஞ்செய்து வாழும் வாழ்க்கை இல்லறமாகும். உலகப் பற்றை யொழித்து வீடுபேற்று