உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அறமுங் கொடையும்

அறம்: அறநெறியிற் பொருளீட்டி அப் பொருளால் அறநெறியில் இன்பந் துய்க்கவேண்டும் என்பதை உணர்த்தற்கே, அறநூலார் இம்மைப் பொருள் மூன்றையும் அறம் பொருள் இன்பம் என்னும் இம் முறைப் படுத்திக் கூறினர். ஒவ்வொருவனும் அறநெறியில் தன்தன் தொழிலைச் செய்வதே, அவனவன் பொருளீட்டி இன்பந்துய்க்கும் வழியாகும். அரசன் தொழிலாவது நாடுகாவல். போர்வினையும் நாடுகாவலுட் பட்டதே. அதனால் அக்காலத்து அரசர் பெரும்பாலும் தம் வினைகளி லெல்லாம் அறத்தைக் கடைப்பிடித்தனர்.

குறளரும் சிந்தரும், அரண்மனையில் மகளிர் உறையும் உவளக மெய்காவலராக அமர்த்தப்பெற்றனர். தேவாரம் பாடும் குருடர் பதினறுவர், திருவாமத்தூர்க் கோயிலில் தேவாரப்பாட கராக அமர்த்தப் பெற்றிருந்தனர். இங்ஙனம் சில எச்சப் பிறவியர்க்கு வாழ்க்கை வசதி செய்யப்பட்டிருந்தது.

சிறுவர், மெலியார், தூயர் முதலியோரைக் கொல்லாமையும்; பொருநிலையற்றவன், தோற்றோடுபவன் முதலியோரொடு பொரா மையும்; அடைக்கலம் புகுந்தவனைக் கைவிடாமையும் போரறங் களாகப் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டன.

பண்டைத் தமிழரசர், தம் நாட்டை அல்லது குடிகளை ஆளும் தொழிலை ஆட்சி என்னுஞ் சொல்லாற் குறியாது, காவல் புரவு ஓம்பல் முதலிய சொற்களாலேயே குறிக்க விரும்பினர். அவர் காவல் பூண்ட இடம், குடைநிழல் என்றும் அடிநிழல் என்றும் குறிக்கப்பட்டது. நெடுஞ்செழியன் குற்றமற்ற கோவலனைக் கான்றதால் தன் கோல் கோடிற்றென்று கண்ட நொடியே உயிர் துறப்பானாயின், அவன் அறவுணர்ச்சி எத்துணை அளவிறந்ததாய் இருந்திருத்தல் வேண்டும்!

கொடை: அக்காலத் தரசர், அறம்நோக்கியும் கலை வளர்ச்சி பற்றியும் ஊழியப் பாராட்டாகவும், வினையூக்கற் பொருட்டும்,