உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மறமும் போரும்

87

லிரும்பொறையும் போல் சிறையினின்று தப்பித் தம் உரிமையையும் நாட்டையும் மீளப் பெற்றாருமுளர்.

போர் முடிந்தபின், அரசன் தன் மறவருள் காயப்பட்டவரைத் தேற்றலும் போற்றலும், பொருதுபட்டவரின் மக்கட்கு நன்கொடை யளித்தலும் வழக்கம்.

வெற்றியரசன் தோற்ற அரசனொடு நட்புறவு பூணாவிடத்து, அவன் தலைநகரைக் கொள்ளையடித்தல், அதனை எரியூட்டுதல், அங்குள்ள வயலழித்தல் முதலிய அழிப்புத் தொழிலும்; கட்டடமும் மதிலுமிடித்துக் கவடி வித்துதல், கடிமரந் தடிதல், காவற் பொய்கையை யானைகளை விட்டுக் கலக்கல், நாடு நகர் முதலியவற்றின் பெயரை மாற்றல் 2 முதலிய அவமானத் தொழிலும் செய்து பெருமைகொள்வது பெரும்பான்மை. கொள்ளையடிக் கப்பட்ட பொருள்களுள், கருவூலமும் விருதுகளும் யானை குதிரையும் அரசனைச் சேரும்; மற்றவை மறவரைச் சேரும்.

வென்ற இடத்தில், கல்வெட்டல், வெற்றித்தூண் நாட்டல், பெருமலையிருப்பின் அதில் தன் இலச்சினையைப் பொறித்தல், தன் ஆணை அடிப்படும்வரை தங்கியிருத்தல் முதலிய செயல்களையும் வெற்றியரசன் மேற்கொள்வதுண்டு. வெற்றிவிழா, இயலும்போ தல்லாம், வென்ற அரசன் தலைநகர் வெல்லப்பட்ட அரசன் தலைநகர் ஆகிய ஈரிடத்தும் கொண்டாடப்பெறும். இவற்றுள் முன்னையிடத்தில் அது தப்பாது நிகழும். போரில் நேர்ந்த குற்றங்கட்குக் கழுவாயாக, கோயிற்கும் மறையோர்க்கும் சிறந்த கொடைகள் நிகழ்த்தப்பெறும்.

போரிற்பட்ட படைத்தலைவர்க்கும் சிறந்த மறவர்க்கும், அவருடைய ஊரும் பேரும் போரும் சீரும் பொறிக்கப்பட்ட கல் நடப்பெறும். அது நடுகல் என்றும் பட்டவன் குறி என்றும் அழைக்கப் பெறும். நடுகல்லை நீர்ப்படைசெய்து அதற்கு மாலை சூட்டிப் படைப்பதும், கோயிலெடுத்து விழவயர்வதும் உண்டு.

2. 3ஆம் குலோத்துங்கச் சோழன், பாண்டிமண்டலத்திற்குச் சோழ பாண்டிமண்டலம் என்றும், மதுரைக்கு 'முடித்தலை கொண்ட சோழபுரம்' என்றும், பாண்டியனது ஓலக்க மண்டபத்திற்குச் சேரபாண்டியர் தம்பிரான்' என்றும் பெயர் மாற்றினான்.