உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

பழந்தமிழாட்சி

போர் தொடங்கும்போது, யானைப்படை மிகுந்த அரசர் தம் யானைகளை விட்டுப் பகைப் படைகளையுழக்கச் செய்வர். அவ்வச் சமயத்திற்கேற்ப, சதுரம், நீள்சதுரம், வில், வளையம், வட்டம், அரை வட்டம், சக்கரம், சிறை, விரிபறவை முதலிய வெவ்வேறு வடிவில் சேனைகள் அமைக்கப்படும். போர் நெடுகலும் முரசுகள் முழங்கும். பகையரசன் தலையையேனும் பகைப் படைத்தலைவன் தலையை யேனும் கொண்டுவந்து காட்டிய பொருநனுக்கு, அரசன் பெருங் கொடை யளிப்பன். அது தலைமாராயம் எனப்படும்.

பொதுவாய், கரி பரி தேர் கால் என்னும் நால்வகைப் படை களுள் ஒவ்வொன்றும் தன்தன் இனத்துடனேயே பொரும். அங்ஙனமே படைமறவர் படைத்தவர் அரசர் ஆகிய முத்தரத்தாரும் தத்தம் தரத்தினருடனேயே பொருவர். படைஞர் முன்பும் படைத்தலைவர் பின்பும் அரசர் இறுதியும் பொருவது இயல்பு. சிறுபான்மை படை மயக்கம் ஏற்பட்டு இம் முறை மாறியும் நிகழும். பலநாட் போராயின், பகல்தொறும் பொருது இராத் தொறும் பாசறையில் தங்குவர்.

போரிடையே, தோற்கும் நிலையிலிருக்கும் அரசன் போர்க் களத்தினின்றும் பாசறையினின்றும் தூதுவிடுப்பதும், மாற்றரசன் அதை மதித்து உடன்படிக்கைக் கிணங்குவதும், மதியாது தூதனைச் சிறையிடுவதும் பெண்கோலம் பூணுவித்து அனுப்புவதும் உண்டு.

ஆடையிழந்தவன், குடுமி குலைந்தவன், ஆயுதமிழந்தவன், பாசறை புகுந்தவன், தோற்றோடுபவன் முதலியோரோடு பொருதலும்; புண்பட்டு விழுந்தவனைக் கொல்லுதலும்; படைமடமாகக் கருதப் பட்டன.

போர் முடிவு அரசனுட்பட அனைவரும் பொருது மடிதல், ஈரரசரும் உடன்படிக்கை செய்தல், சிறைபிடிக்கப்பட்ட அரசன் திறை கொடுத்தல், தோற்ற அரசன் ஓடிப் போதல் ஆகிய நால்வகை நிலை களுள் ஒன்றாயிருக்கும்.

வென்ற அரசன், வெல்லப்பட்ட அரசனை நட்பரசனாக்கி மணவுறவு பூணல், சிற்றரசனாக்கித் திறையிடுவித்தல். பெருந் தண்டம் இறுவித்தல், காட்டிற்குத் துரத்திப் பதிலாளியமர்த்தல், மானக்கேடு செய்தும் செய்யாதும் சிறையிடல், கொல்லுதல் ஆகிய அறுவகைச் செயல்களுள் ஒன்றைச் செய்வன். பிற்கூறப்பட்ட முந்நிலைகளிலும், தோற்ற அரசனின் தேவிமார் வென்ற அரசனின் தலைநகரிலுள்ள வேளம் என்னும் சிறைக்கோட்டத்தில் சிறையிடப் படுவதுண்டு. கரிகால் வளவனும் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர