உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மறமும் போரும்

85

பண்டைக்காலப் போர்க்கருவிகள், எய்படை, எறிபடை, குத்துப் படை, வெட்டுப்படை, அடிபடை, தடுபடை என அறு வகைய. வில்லம்பு எய்படை, விட்டேறு எறிபடை; வேல் ஈட்டி குந்தம் முதலி யன குத்துப்படை; வாள் வெட்டுப் படை; மழு தண்டு முதலியன அடிபடை, கவசம் கேடகம் முதலியன தடுபடை.

இனி, எரிமருந்து கல்வெட்டிற் குறிக்கப்பட்டிருப்பதால், இப்போது வேடிக்கைக்காக விடப்படும் வாணம்', பழங்க காலத்தில் ழிஞைப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஊகிக்க டமுண்டு.

படைகள் போருக்குச் செல்லும்போது, பொதுவாக, முதலாவது காலாட்படையும், இரண்டாவது குதிரைப் படையும், மூன்றாவது தேர்ப் படையும், நான்காவது யானைப்படையும் செல்லும். ஒவ்வொரு படையிலும் சேனைக் கணிமகன் என்னும் கணியன் இருப்பான். சேனை முழுவதிற்கும் பொதுவான் கணியன் சேனைப் பெருங்கணி எனப்படு வான். தன் நாட்டில் நடக்கும் போராயினும், அயல்நாட்டில் நடக்கும் போராயினும், அரசன் செல்லும் போதெல்லாம் அவனுடன் புலவர் பாணர் கூத்தர் முதலியோரும் செல்வது வழக்கம். சேரன் செங்குட்டு வனுடன் வடநாடு சென்ற நாடக மகளிர் நூற்றிருவரும், குயிலுவர் (வாத்தியக் காரர்) இருநூற்றெண்மரும், நகைவேழம்பர் நூற்றுவரும் ஆவர்.

தலைநகருக்குத் தொலைவான இடத்தில் நடக்கும் போருக் கெல்லாம் பாசறை அமைத்து முள்வேலி கோலப் பெறும். அது வேனிற் காலத்தில் அமைக்கப்பெறின் வேனிற் பாசறையென்றும், குளிர் காலத்தில் அமைக்கப்பெறின் கூதற் பாசறை யென்றும் பெயர் பெறும். மற்றக் காலங்களில் நீண்டநாட்போர்கள் பொதுவாக நிகழ்த்தப் பெறுவதில்லை. வேனிற்போர் கார்தொடங்குமுன் அல்லது தொடங்கியவுடன் முடிக்கப்படும். எந்தப் போருக்கும் இத்துணைக் காலம் என்னும் யாப்புறவில்லை. போருக்குச் செல்லுங் காலம் படைகளின் நிலையையும் போர்க்களத்தின் தொலைவையும் பொறுத்தது. ஒருநாட் போருமுண்டு; பல்லாண்டுப் போருமுண்டு. சேரன் செங்குட்டுவன் ஈராண்டெட்டு மாதமும், முதற் குலோத் துங்கன் ஈராண்டும் வடநாட்டுப் போரிற் செலவிட்டனர். பாசறை பாடிவீடு எனவும்படும்.

போர் தொடங்குமுன், போர்க்களத்தையடுத்த வூர்களிலுள்ள ஆநிரைகள், பார்ப்பனர், பெண்டிர், மகப்பெறாதோர், பிணியாளர், சிறுவர், முதியோர் முதலியோர் அவ்விடத்தினின்றகன்று பாது காவ லான இடத்தை அடையும்படி எச்சரிக்கப் பெறுவர். போர்க்களத் திற்குப் பறந்தலை என்று பெயர்.

1. அக்னியாஸ்திரம் என்று புராணம் கூறுவது வாணத்தைப் போலும்!