உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

உலவுங் கைத்தொழிலும்

உழவன் உயர்வு: உணவின்றி உயிர்வாழ்க்கை யின்மையின், அவ் வுணவை விளைக்கும் உழவர் மன்னுயிர்த் தேருக்கு அச்சாணி யாகவும், மன்பதை மரத்திற்கு ஆணிவேராகவும் கருதப்பட்டனர்.

"உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து'

என்றார் திருவள்ளுவர்.

""

(குறள்.)

சிறப்பாக இரப்பார்க்கொன் றீபவரும் விருந்தினரைப் பேணு

பவரும் உழவரேயாவர்.

"இரவா ரிரப்பார்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்”

என்று வள்ளுவரும் "இரப்போர் சுற்றம்” என்று இளங்கோவடி களும்,

"வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்

என்று நல்லாதனாரும்,

"எந்நாளும்

-

""

காப்பாரே வேளாளர் காண்

என்று கம்பரும் கூறியிருத்தல் காண்க.

(திரிகடு. 12)

விருந்தோம்பலும் இரப்போர்க் கீதலுமாகிய வேளாண்மை செய்வதினாலேயே உழவர் வேளாளர் எனப்பட்டனர். வேளாண்மை யாவது பிறரை விரும்பிப் பேணுதலை யாளுந் தன்மை. வேள் - விருப்பம்.

உழவர் அமைதிக் காலத்தில் உழவுத்தொழிலைச் செய்துவந்த தோடு, போர்க்காலத்தில் போர்ப்பணியும் புரிந்து வந்தனர்.

"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க

(1582)

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங் குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத் தில்லறத்தாரையும்