உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17

வணிகமும் போக்குவரத்தும்

உழவினால் விளைக்கப்படும் பொருள்களையும் கைத்தொழி லாற் செய்யப்படும் பொருள்களையும் உள்நாட்டிற் பகிரவும், உள் நாட்டுப் பொருள்களை வெளிநாட்டிலும் வெளிநாட்டுப் பொருள்களை உள் நாட்டிலும் பரப்பவும், பெரும் பொருளீட்டி நாட்டுச் செல்வத்தைப் பெருக்கவும், வணிகம் இன்றியமையாத தென்று கண்ட பண்டையரசர், அதனை ஒல்லும் வாயெல்லாம் ஊக்கிவந்தனர்.

நகரந்தொறும் வணிகர் குழுமம் (Merchant Guild) இருந்தது. நாட்டுப்புற நகராட்சி பெரும்பாலும் நகர வணிகர் கையில் இருந்தது. நகரங்களையெல்லாம் அரசன் நேரடியாக மேற்பார்த்து வந்தனன். தலைமை வணிகனுக்கு எட்டிப் பட்டமும் எட்டிப்புரவும் அளிக்கப் பட்டமை முன்னரே கூறப்பட்டது. வணிகர் குழுமங்கட்கு வலஞ்சை மணிக்கிராமம் அஞ்சுவண்ணம் முதலிய பட்டங்களும் அளிக்கப்பட்டன.

வரலாற்றுக் காலத்திற்கு முன்பே, நிலவாணிகம் நீர்வாணிகம் ஆகிய இருவகை வாணிகமும் தமிழகத்தில் தழைத்தோங்கி யிருந்தன. நிலங்கடந்து செய்யும் நிலவாணிகம் காலிற்பிரிவு என்றும், நீர்கடந்து செய்யும் நீர் வாணிகம் கலத்திற் பிரிவு என்றும் கூறப்பட்டன.

"முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை"

(980)

என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே நீர்வாணிகம் சிறந்திருந்தமை அறியப்படும்.

நிலப்போக்குவரத்து: தடிவழி யென்றும் பெருவழி யென்றும் கூறப்படும் சாலைகள் நாடெங்கும் இருந்தன. அவை 64 சாண் அகலமும் இருமருங்கும் மரங்களும் உள்ளனவாயிருந்தன. 'கோட் டாற்றுச் சாலை', 'மதுரைப் பெருவழி' 'அரங்கம் நோக்கிப் போந்த பெருவழி' 'கொங்குவழி' 'தடிகைவழி', 'வடுகவழி' முதலிய பெயர்களால், தமிழ்நாட்டுப் பெருநகர்கள் மட்டுமன்றித்