உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலையுங் கல்வியும்

109

இதுபோதுள்ள கடைச்சங்க இலக்கியத்திலிருந்து அறியப் படும் புலவர் ஏறத்தாழ ஏழுநூற்றுவர் ஆவர். அவருள் மகளிர் இருபத் திருவரும் அரசர் பன்னிருவர்க்கு மேற்பட்டவரும் ஆவர்.

அறுவைவாணிகன், ஓலைக்கடைகாரன், கணியன், கூத்தன், கூலவாணிகன், பாணன், பொருநன், மருத்துவன், வண்ணக்கன் முதலிய பல்வகைத் தொழிலாளரும்; காவற் பெண்டு, அரசி, குறமகள், பேய்மகள் முதலிய பலதர மகளிரும் புலவராயிருந்தனர்.

கடைச் சங்கத்திற்குப் பிற்காலத்திலும், சேரமான் பெருமாள் நாயனாரும் குலசேகராழ்வாரும் கண்டராதித்தரும் அதிவீரராம பாண்டியனும் போலும் அரசரும், திருவெண்காடர்போலும் வணிகரும், 2ஆம் ஒளவையாரும் காரைக்காலம்மையாரும் போலும் மகளிரும் பலர் புலவராயிருந்தனர்.

வரலாற்றிற் கெட்டாத புலவர், சங்ககாலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் எத்துணையரோ அறியோம்.

ஆசுகவிகள் காசு என்று பிற்காலத்தில் வாங்கப்பட்ட வரி, அரசவொப்பம் பெற்று அவர் வாழ்க்கைச் செலவிற்கு வாங்கப் பட்டது போலும்!

அரசர் இலக்கியத் தொண்டு: அரசர் புலவரை நூலியற்று மாறு ஊக்கியும் தாமும் நூலியற்றியும் வந்ததுடன், பல தனிப் பாடல்களையும் பாவும் பொருளும் அளவும் பற்றித் தொகுத்தும் தொகுப்பித்தும் உள்ளனர், நற்றிணை தொகுப்பித்தோன் பாண் டியன் பன்னாடு தந்த மாறன்வழுதி; குறுந்தொகை தொகுத்தோன் பூரிக்கோ; ஐங்குறுநூறு தொகுப்பித்தோன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை; அகநாநூறு தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.