உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

பழந்தமிழாட்சி இத்தகைய சமையங்களில், இங்ஙனம் பாடினார்க்கிது வென்று விளம்பி முன்னரே பொற்கிழியைச் சங்கமண்டபத்தில் தூக்கி டுவது பாண்டியர் வழக்கம்.

குறிக்கை (சமசியை) பாடலும், அரிகண்டம் எமகண்டம் போன்ற கடும்பா (ஆசுகவி) பாடலும், அரசர் அவ்வப்போது நல்லிசைப் புலவர்க்கும் கடும் பாவலர்க்கும் நடத்தி வந்த செய்யுட் போட்டி வகைகளாகும்.

தக்க புலவர் தலைமையமைச்சராகவும் தூதராகவும் அமர்த்தப் பெற்றனர். அவைக்களத் தலைமைப் புலவர்க்கும், அரங்கேறிய குடைகொடி முதலிய கொற்றச் சின்னங்கள் அளிக்கப்பட்டன. புலவரின் பரிந்துரைக்கும் வேண்டுகோட்கும் இணங்குவதும், அவரது அறிவுரையையும் அறவுரையையும் இடித்துரை ரையையும் ஏற்றுக் கொள்வதும், அவரது புலந்துரையையும் பழிப்புரையையும் பொறுத்துக் கொள்வதும், செவ்வியறியாதும் விடைபெறாதும் எச்சமயத்திலும் ஓலக்க மண்டபத்திற்குள் அவரைப் புகவிடுவதும், அவருக்குப் பணிவிடை செய்வதும், அவரை வழிவிடுக்கும்போது ஏழடி பின்போய் மீள்வதும், அக்காலத் தரசர் பலர் செயல்களாகும்.

பரிசளியாவிடத்தும் தம்மை அவமதித்தபோதும் புலவர் அரசரைச் சாவிப்பதுமுண்டு.

கல்வித்தர வுயர்வு: அக்காலப் புலவர் கடுத்துப் பாடும் ஆற்றலுடையராயிருந்து செய்யுளிலேயே தம்முள் உரையாடி வந்தனர். நிகண்டு என்னும் அகராதியுட்பட அனைத்திலக்கியமும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. மதுரைச் சங்கத்திலும் பிற புலவரவையிலும் அரங்கேறிய பின்னரே நூல்கள் நாட்டில் உலவலாயின.

கல்வி வளர்ச்சி: தலைச்சங்கத்தில் இருந்த புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருள் கவியரங்கேறியவர் எழுவரென்றும்; இடைச்சங்கத்தில் இருந்த புலவர் ஐம்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் மூவாயிரத்தெழுநூற்றுவர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருட் கவியரங்கேறியவர் ஐவர் என்றும்; கடைச் சங்கத்தில் இருந்த புலவர் நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடியவர் நானூற்று நாற்பத்தொன்பதின் மர் என்றும், அவரைப் போற்றிய பாண்டியருள் கவியரங்கேறியவர் மூவர் என்றும் முச்சங்க வரலாறு கூறும்.