உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமயமும் கொள்கையும்

111

மால்வழிபாடும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிற்குரியவாதலின் அவ் விரண்டும் பற்றிய சைவமும் வைணவமும் தமிழரசரால் பெரும்பாலும் கடைப் பிடிக்கப்பட்டன. அவ் விரண்டனுள்ளும் சிவநெறியே அரசரிடைச் சிறந்திருந்தது. இறைவன் என்றும் பிறவா யாக்கைப் பெரியோன் என்றும் சிவனுக்கு வழங்கிய பெயர்களே, சிவநெறித் தலைமையை உணர்த்தி விடும்.

சிறுதெய்வங்கள், காற்றும் நெருப்பும் முதலிய இயற்கைத் தெய்வமும் சூரரமகளும் பூதமும் முதலிய பேய்த்தெய்வமும், கதிரவனுந் திங்களும் முதலிய கோள்தெய்வமும், பட்ட மறவனாகிய நடுகல்தெய்வமும், இறந்த கற்பியாகிய பத்தினித்தெய்வமும், நால்வகை வருணத்திற்குரிய வருணத்தெய்வமும், ஆறும், மலையும் நகரும் முதலிய இடத்திற்குரிய இடத்தெய்வமும், கல்வியும் காதலும் போரும் முதலிய தொழிற்குரிய தொழிற்றெய்வமும், காப்புமட்டும் அளிப்பதாகக் கருதப்படும் காப்புத் தெய்வமும் எனப் பலவகையாம்.

கடைச்சங்க காலம்வரை, அரசரும் புலவரும் பொதுமக்களு மாகிய முத்திறத்தாரிடையும், சமவியற் கொள்கையும் பிறர் மதப் பொறையும் இருந்துவந்தன. அதன்பின் சமயப் போர் தமிழ்நாட்டில் தலை தூக்கிற்று. முதலாவது, வைதிக சமயம் எனப்படும் சைவ வைணவங் கட்கும் அவைதிக சமயம் எனப்படும் சமண பௌத்தங் கட்கும் இடையே போர் எழுந்தது. பின்னர்ச் சமணபௌத்தங்கள் ஒடுக்கப்பட்டபின், சைவ வைணவங்கட்கிடையே போர் மூண்டது.

சங்கக்காலத் தரசரும் முதலாம் இராசராசன் இராசேந்திரன் முதலிய பிற்காலத் தரசரும், தாம் கடைப்பிடித்த சமயக் கோயில் கட்கு மட்டுமன்றிப் பிற மதக்கோயில்கட்கும் மானியம் விட்டனர். ஆயின் 8ஆம் நூற்றாண்டினனும் சமணனுமான மகேந்திரவர்மப் பல்லவன் சைவ சமய குரவருள் ஒருவரான திருநாவுக்கரசரைப் பலவகையில் வதைத்துக் கொல்ல முயன்றான். அதே நூற்றாண்டின னும் சிவனடியாருள் ஒருவனுமான நெடுமாறன் எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றினான். 12ஆம் நூற்றாண்டினனும் சைவனு மான 2ஆம் குலோத்துங்கன், கூரத் தாழ்வான் பெரியநம்பி என்னும் இரு வைணவ குரவரை முறையே கண் பறித்துச் சாகடித்தான். அதோடு தில்லை மன்றிலிருந்த திருமாலுரு வத்தையும் பெயர்த்துக் கடலில் எறிந்துவிட்டான். அங்ஙனம் ஒருசில அரசர் நெறி திறம்பி நடந்தனர். திருமங்கையாழ்வார் நாகையிலிருந்த பொற் புத்த வுருவைக் கொள்ளையடித்துத் திருவரங்கக் கோயிலைப் புதுப்பித் தாரென்று, ஒரு பரவை வழக்குச் செய்தி வழங்கி வருகின்றது.