உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

திருப்பணிகள்

ம்மை மறுமை வீடென்னும் மும்மை யின்பத்திற்கும் இறைவழி பாடும் இன்றியமையாததாகக் கருதப்பட்டமையின் பண்டைத் தமிழகத்தில் இங்கிலாந்திற்போல் மதத்துறையும் ஓர் அரசியல் திணைக் களமாக இருந்துவந்தது. பிற மதக் கோயில்கட்கும் இடையிடை மானியம் விடப்பட்டதேனும், சைவ கோயில்களே பெரும்பாலும் அரசரின் ஆட்சிக்குட் பட்டிருந்தன.

வைணவக்

பேரரசரெல்லாரும் ஒன்றும் பலவுமாகப் பெருங்கோயில்கள் கட்டி வைத்தனர். கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்த கோச்செங்கட் சோழன் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான். கி. பி. 10ஆம் 11ஆம் நூற்றாண்டிலிருந்த முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டி விலையேறப்பெற்ற அணிகலங் கள் ஊர்திகள் தட்டு முட்டுகளுடன் 35 ஊர்களைத் தேவதானமாக விட்டான். கோயில் கட்டாத அரசர் இறையிலியும் அணிகலங்களும் பிறவும் அளித்தனர்.

கோயிற்கு கோட்டம், குடிசை, தேவகுலம், தளி, நகரம், பள்ளி, மந்திரம், மாளிகை, அம்பலம் முதலிய பல பெயர்கள் வழங்கின. கோயில்கள் சிறுகோயில் பெருங்கோயில் என இருதிறத்தன. சிறு கோயில்களை ஊரவையாரும் பெருங்கோயில்களைத் தனிக் குழுவாரும் கவனித்து வந்தனர். பெருங்கோயிலை மேற்பார்ப் பவர்க்குக் கோயில் வாரியத்தார் என்றும் ஸ்ரீகாரியம் பார்ப்பார் என்றும், அவருள் தலைவனுக்கு ஸ்ரீகாரியக் கண்காணி நாயகம் என்றும் பெயர். சிவன் கோயிலை மேற்பார்ப்பவர் மகேசுவரர் என்றும், திருமால் கோயிலை மேற்பார்ப்பவர் மாகவைணவர் அல்லது தானத்தார் என்றும் பொதுவாகக் கூறப் பெறுவர். கோயிற் காரியங்களை நடத்திவைப்பதற்கு ஆனவாள் என்றோர் அரசியல் வினைனும் இருந்தான்.

கோயிற் பூசாரிக்குத் திருவடி பிடிப்பான் என்றும், போற்றி என்றும், நம்பினான் என்றும், அவன் துணைவனுக்கு எடுத்துக்