உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

பழந்தமிழாட்சி

அக்காலத்துக் கோயில்கள் பின்வருமாறு பல துறையில் பொதுநலத் தொண்டாற்றி வந்தன.

(1) தொழிற் றுறை: கோயில் நிலங்கள் ஏழை யுழவரிடத்தும், கோயிற் கன்றுகாலிகள் ஏழை யிடையரிடத்தும், வாரச் சாகுபடிக் கும் வளர்ப்பிற்கும் விடப்பட்டன.

சுந்தரபாண்டியன் காலத்தில், சூரலூரை யடுத்திருந்த கோயிற் குளமும் வாய்க்காலும் அணையும், பிள்ளையான் என்னும் செம்படவன் பார்வையிலும், அவற்றின் பழுதுபார்ப்பு சூரலூர் வெட்டியானிடத்தும், விடப்பட்டிருந்தன. பிள்ளையானுக்குக் கோயிற்குடிகள் செலுத்தும் வாய்க்கால் பாட்டமும் பாசிப் பாட்டமும், வெட்டியானுக்குச் சம்பளமும் உம்பளமும், கைம் மாறாக அளிக்கப்பட்டன.? கண்காணிப்பு, வழிபாடு, மடைத் தொழில், துப்புரவாக்கம், அலங்கரிப்பு, கணக்கு, காவல் முதலிய பல்துறைபற்றிய அலுவலாள ரோடு, இசைவாணரும் கூத்தரும் கம்மியரும் பணிமக்களும் குடிமக்களு மாக எத்துணையோ பேர் கோயிலில் நிலையாக அமர்த்தப்பெற்றுத் தக்க சம்பளம் பெற்று வந்தனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், தேவார ஓதுவார் நாற்பத்தெண்மரும் பதியிலார் நானூற்றுவரும், இசைக்கருவி யியக்குவார் பற்பலரும், சாக்கையரும், கணியரும், ஐவகைக் கொல்லரும், குயவரும், தையற்காரரும், வண்ணாரும், முடியலங்கார வினைஞரும் உட்பட ஏறத்தாழ ஆயிரவர் நிலையான வினைஞராக அமர்த்தப் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. பஞ்சகாலத்தும் பிற காலத்தும், உணவிற்கு வழியற்ற ஆடவரும் பெண்டிரும் கோயிற் கடிமை புக்குக் கோயிற்பணியாற் பிழைத்துவந்தனர். அவருக்கு மணக்கவும் குடும்ப வாழ்க்கை நடத்தவும் உரிமையிருந்தது.

(2) பணத்துறை: பணம் வேண்டியவர்க்கு, வட்டிக் கீடாகக் கோயிலில் குறிப்பிட்ட விளக்கேற்றுமாறு, கோயிற் பண்டாரத் தினின்று கடன் கொடுக்கப்பட்டது.

வரகுணபாண்டியனால், திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற்காக 1400 பொற்காசு பன்னீரூராரிடைப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இருகலம் நெல் என்றும், வட்டியைக் கொண்டு வழிபாட்டை நடப்பிக்கவேண்டு மென்றும், வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இறுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டன. 3

2. P.K., pp. 222-3.

3. K., pp. 90 -91. 3.K,