உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

பழந்தமிழாட்சி

அப் புதுக் கல்வெட்டுகளை அதிகாரிகள் காட்டு மிடத்தில் பதிப்பது வழக்கம். கல்வெட்டுப் படியெடுப்பு கற்படி மாற்று எனப்பட்டது. சிதைந்துபோன கல்வெட்டுகளைப் புதுப் பிக்கும்போதும்

இம்முறையே கையாளப் பெறும்.

அக்கிர

(6) அறத்துறை: பார்ப்பனரை யுண்பிக்கும் சாலையும், அடியாரை யுண்பிக்கும் மடமும், இரப்போரை யுண்பிக்கும் அடிசிற் சாலையும் ஆகிய மூன்றனுள் ஒன்றோ பலவோ, பல வூர்களிற் கோயிலோ டிணைக்கப்பட்டிருந்தன. பெரும் பற்றப்புலியூரில் இருந்த அறச்சாலை அறப்பெருஞ் செல்வி என்றும், திருமுக் கூடலில் சாத்திரர் என்னும் பார்ப்பன வடமொழி மாணவர்க்கு மருத்தகமாகவும் மருத்துவக் கல்லூரியாகவு மிருந்த ஆயுர்வேத மருத்துவசாலை (ஆதுலசாலை) ‘வீரசோழன்' என்றும் பெயர் பெற்றிருந்தன.

(7) அரசியற் றுறை: அரசிறை யிறுக்காத நிலங்களும் ஊர்களும் கோயிற்கு விற்கப்பட்டு, அவ் விலைத் தொகையினின்று அவற்றிற்குரிய அரசிறை யிறுக்கப்பட்டது,

ஊர்

மண்டபமில்லாத வூர்களிலெல்லாம், கூட்டங்கள் கோயில் மண்டபத்திலேயே கூட்டப்பட்டன.

அரசியற்

சில அரசர் கோயிற்பணியொடு திருநூற்பணியும் செய்து வந்தனர். முதலாம் இராசராசன் திருமுறை கண்டதும், மூன்றாம் குலோத்துங்கன் பெரிய புராணம் இயற்றுவித்ததும் நூற்பணியாம்.

கோயிற் கணக்குகள் ஆண்டுதோறும் நாட்டதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.