உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




21

அரசர் விழாக்கள்

அரசர் விழாக்கள் பொதுவும் சிறப்பும் என இருபாற்படும். அவற் றுட் பொதுவாவன :

(1) மண்ணுமங்கலம்: அரசன் முதன் முறையாக முடிசூடும் போதும், ஆண்டுதொறும் வரும் முடிசூடிய நாளிலும், கொண்டாடப் பெறும் விழா மண்ணுமங்கலம் ஆகும். அஃது நீராடி முடிசூடும் மங்கல வினையாதலால் மண்ணுமங்கலம் எனப்பட்டது. மண்ணுதல் - நீராடுதல். தொல்காப்பியர் இதனைச்

"சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம்" என்பர்

(1037)

உழிஞைப் போரில், மதிற்கண் ஓரரசன் மற்றோ ரரசனைக் கொன்று அவன் குடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலம்,

'குடுமி கொண்ட மண்ணுமங்கலம்'

(தொல்.1014)

எனப்படும். அது அகத்தோன் மண்ணுமங்கலமும் புறத்தோன் மண்ணுமங்கலமும் என இருவகை.

மாற்றரசன் மதிலையழித்துக்

கழுதையேரால் உழுது

வெள்ளை வரகுங் கொள்ளுங் கவடியும் வித்தி, அமங்கலமாயின செய்த வெற்றிவேந்தன் அவற்றிற்குக் கழுவாயாக நீராடும் மங்கலம், ‘மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம்'

எனப்படும்.

(தொல்.1037)

(2) பெருமங்கலம்: ஆண்டுதொறுங் கொண்டாடப் பெறும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டம் பெருமங்கலம் ஆகும். அது பெருநாள் எனவும் படும். அதில் அரசன் உயிர்களிடத்துக் காட்டும் அருட்கறிகுறியாகத் தூய வெள்ளணி யணிந்து, சிறைப்பட்டவரை விடுதலை செய்து, கொலையுஞ் செருவும் ஒழிந்து, இறைதவிர்தலும் தானஞ்செய்தலும் பிறவும் மேற்கொள்வது வழக்கம்.