உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இல்லற வாழ்க்கை

125

களவுமணம் புரிந்ததாக, மணிமேகலை கூறும். இயலுமிடமெல் லாம் களவு கற்பாகத் தொடரும். அரசன் மணத்திற்கு இத்துணை யென ஒரு வரம்பில்லாதிருந்தது.

அரண்மனையில் மகளிர் உறைவதற்குத் தனியிடமுண்டு. அஃது உவளகம் எனப்படும். அதில் அரசனையும் இளவரசரையுந் தவிரப் பருவமடைந்த ஆடவர் வேறு யாரும் புகுவதில்லை. குறளருஞ் சிந்தரும் பெண்டிரும் சோனகப் பேடியரும் வாளேந்தி உவளகத்தைக் காக்குமாறு அமர்த்தப்பட்டிருந்தனர். கன்னியர் உறைவதற்குத் தனிமாடம் இருந்தது. அது கன்னிகைமாடம் எனப்பட்டது. அரசன் உவளகஞ் செல்லும் போதெல்லாம் மகளிர் பரிவாரமே உடன் செல்லும். தேவியருக்குத் தனித்தனி மாளிகை யிருந்தது.

அரசன் வேறொருத்தியைக் காதலித்தான் என்றோ வேறு காரணம்பற்றியோ, கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது, புலவர் பாணர் முதலியோர் வாயிலாய் அவள் ஊடலைத் தீர்ப்பது அரசன் வழக்கம்.

அரசனுக்கும் அரசிக்கும், அடிமையரும் தோழியரும் குற்றேவ லரும் பரிவாரத்தாரும், மெய்காவலருமாகப் பற்பல ஊ ஊழியர் இருந்தனர். அரசி செல்லுமிடமெல்லாம் பரிவார மகளிர் எண் மங்கல (அட்டமங்கல)ப் பொருள்களை ஏந்திச் செல்லுவது வழக்கம்.

நகைச்சுவை யுணர்ச்சிமிக்க அரசர், தம் சொந்த இன்பத்திற் கென்று ஒரு நகையாண்டியை அமர்த்திக்கொள்வது முண்டு. அவனுக்குக் கோமாளி அல்லது கோணங்கி என்று பெயர்.

அரண்மனை வேலைக்கென்று தனியாக, ஐவகைக் கம்மி யரும், மயிர்வினைஞன் வண்ணான் செம்மான் முதலிய குடிமக் களும், பிற தொழிலாளரும் அமர்த்தப்பெற்றிருந்தனர். அவரை அரண்மனைத் தட்டான் அரண்மனை மயிர்வினைஞன் அரண் மனைக் குயவன் என அழைப்பது வழக்கம். அரண்மனைப் பொற் கொல்லன் சட்டையணிந்திருந்தான் என்று சிலப்பதிகாரங் கூறுவ தால், அரசனொடு நெருங்கிப் பழகுபவர்க்கெல்லாம் அச் சிறப்பளிக் கப்பட்டிருந்ததாகத் தெரிகின்றது.

அரசனுக்கு உட்பகையும் அறைபோகு வினைஞரும்பற்றிய அச்சமிருக்கும்போது, அரண்மனை மருத்துவர் அவன் உணவை அன்னம் சககரவாகம் கருங்குரங்கு முதலிய உயிர்களைக்கொண்டு நோட்டஞ் செய்வர். அரசன் உண்டபின் அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பவனுக்கு அடைப்பையான் (அடைப்பைக் காரன்) என்று பெயர்.