உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25

இல்லற வாழ்க்கை

மூவேந்தரும், பெருநில மன்னர் குடியிலும் குறுநில மன்னர் குடியிலும் வேளிர் குடியிலும் பெண் கொண்டனர். அவருக்குப் பல தேவியர் இருந்தனர். அவருள் தலையான் கோப்பெருந்தேவிக்கு அரசனுக்குள்ள மதிப்பிருந்தது. ஓலக்க மண்டபத்திலும் சூழ்வினைக் கூட்டத்திலும் நகர்வலத்திலும், கோப்பெருந்தேவியும் அரசனொடு கூட அமர்ந்திருப்பது வழக்கம்.

தேவிமாருள் அரசனால் சிறப்பாக காதலிக்கப்படுபவள் காமக்கிழத்தி எனப்படுவாள். ஒருவர்க்கே உரிமை பூணுங் குலப் பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி என, நம்பியகப் பொருள் கூறும். உதயகுமரன் மணிமேகலையை இவ்வகையில் மணக்க விரும்பியிருக்

கலாம்.

சங்ககாலத் தரசர் சிலர் சேரிப் பரத்தையரொடும் தொடர்பு காண்டிருந்ததாகத் தெரிகின்றது. பரத்தையர் சேரியிலுள்ள மகளிர்க்குச் சேரிப்பரத்தையர் என்றும், அவருள் அரசனால் காதலிக்கப்படுபவட்குக் காதற் பரத்தை யென்றும், அவனால் வரைந்துகொள்ளப்பட்ட பரத்தைக்கு இற்பரத்தை யென்றும் பெயர். அரசன் தொடர்புகொள்ளும் பரத்தையரெல்லாம், ஒருவர்க்கே யுரிமை பூணுங் குலப் பரத்தையாராகவே யிருந்திருத்தல் வேண்டும்.

அரசனாற் காதலிக்கப்படும் பரத்தையரெல்லாம், அவனு ரிமையென அவன் பெற்றோராலேயே ஒதுக்கப்பட்டு இளமைமுதல் வளர்க்கப்பட்டவர் என்று, இறையனா ரகப்பொருளுரையாசிரியர் கூறுவர் (பக். 226-ப.8.)

இனி, அரசன் வேட்டைக்கும் உலாவிற்கும் சென்றவிடத்து யாரேனும் ஓர் அழகிய அரசகன்னியைத் தனியிடத்துக் காணின், அவளைக் களவுமணம் புரிவதுமுண்டு. நெடுமுடிக்கிள்ளி நாக நாட்டரசன் மகளாகிய பீலிவளையைக் கடற்கரையிற் கண்டு