உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அன்றாட நிகழ்ச்சி

123

நண்பகலில் அரசன் உணவுண்டபின் இரண்டொரு நாழிகை அல்லது வெயில் தணியும்வரை இளைப்பாறலாம். அதன்பின் மீண்டும் ஓலக்கமண்டபம் சென்று சிறிது நேரம் அரசியற்

காரியங்களைக் கவனிக்கலாம்.

பிற்பகல் நிகழ்ச்சிகள் பொதுவாக, அரசர்க்குக் குடும்பக் காரியக் கவனிப்பாகவும், இன்பப் பொழுதுபோக்காகவுமே யிருக்கும். யிருந்து,

இராவுணவு உண்டபின், சிறிதுநேரம் உரையாடி ஊரடங்கும் வேளையில் அரசன் பள்ளிகொள்வன். பள்ளிமாடத் திற்குப் பள்ளிமண்டபம், பள்ளியம்பலம் என்றும் பெயருண்டு.

கார்காலத்திலும், போர்க்காலத்திலும், விழாநாளிலும் நாடு காவற் சுற்றுப்போக்கு நாள்களிலும், பிற சிறப்பு வினைநிகழ்ச்சி யின்போதும், மேற்கூறிய அன்றாட நிகழ்ச்சி வினைகள் மாறியும் நிகழும்.

பொதுவாக, அறத்தை உயிர்நாடியாகக் கொண்டிருந்த செங்கோலரசரெல்லாம், எவ்விடத்தும் எந்நேரத்தும், பெருமுறை கேடான காரியங்களைக் கவனித்தற்கு ஆயத்தமாயிருந்ததாகவே தெரிகின்றது.

"தலைமகனால் தலைநின்று ஒழுகப்படுவன தருமம் அருத்தம் காமம் என மூன்று; அம் மூன்றினையும் ஒரு பகலை மூன்று கூறிட்டு முதற்கட் பத்து நாழிகையும் அறத்தொடு படச்செல்லும், இடையன பத்து நாழிகையும், அருத்தத்தொடு படச்செல்லும்; கடையன பத்து நாழிகையும் காமத்தொடு படச் செல்லும்; ஆதலான் தலைமகன் முதற்கண் பத்துநாழிகை தருமத்தொடு படுவான்; தலைமகளும் வேண்டவே தானும் வேண்டிப் போந்து அத்தாணி புகுந்து அறங் கேட்பதும் அறத்தொடு படச் சொல்வதுஞ் செய்யும், நாழிகை அளந்துகொண்டு இ டையன பத்து நாழிகையும் இறையும் முறையுங் கேட்டு அருத்தத்தினொடு பட்டனவே செய்து வாழ்வானாம். அவ் வருத்தத்து நீக்கத்துக் கடையன பத்து நாழிகையில் தலைமகளுழைப் போதரும்," என்பது இறையனாரகப் பொருளுரை (ப. 226).

அரசர்க்குக் “காலைக்கடன் கழித்தலும், உலகத்திலிருந்து நாடு காவற்றொழில் செலுத்தலும், விருந்துடன் அடிசில் கைதொடலும், நாவலரொடு கல்வி பயிறலும், ஆடல் பாடல்களிற் களித்தலும், மடவாரொடு கூடலும், துயிறலும், துயிலுணர்ந்து தேவர்ப் பராவலு மாகிய காலவரை எட்டு”, என்பது தஞ்சைவாணன் கோவையுரை (ப.

248).