உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இல்லற வாழ்க்கை

127

பான்மை. அவர் தம் புதல்வியரை அரச குடியினர்க்கன்றிப் பிறர்க்குக் கொடுப்பதில்லையென்பது, 3ஆம் குலோத்துங்கன் அம்பிகா பதியைக் கொன்றதினால் அறியப்படும்.

நாடுகாவல், சந்து (பகைதணிவினை), போர், நட்பரசர், விழா முதலிய காரணம்பற்றி, அரசன் தன் தேவியரிடத்தினின்று பிரிந்துபோவன், பிரிவுக் காலத்தில், இன்றியமையும் அணிகழற்ற லும், மெய்யலங்கரியாமையும், அளவாக வுண்டலும், நாளெண் ணிக் கழித்தலும், மகிழாதிருத்தலும். தெய்வத்தை வேண்டலும், மீட்சிக் காலத்தில் வரவுகண்டு மகிழ்தலும் விருந்தயர்தலும் தேவியர் மேற்கொள்ளுஞ் செயல்களாம்.

அரசன் இறப்பின், தேவியரும் உடன் இறப்பர்; அல்லது உடன் கட்டையேறுவர்; அல்லது கைம்மை பூணுவர். அவர் முன்னிருவகையில் இறப்பதே பெரும்பான்மை.