உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அரசர் முடிவு

தமிழரசர் முடிவு தனிப்பட்டதும் குடிப்பட்டதும் என

ருவகை.

அரசர் தனிமுடிவு: தமிழரசர், போரில் இறத்தலையே, பெரும் பேறாகவும்,விண்ணுலகம் புகும் வழியாகவுங் கொண்டிருந்தனர். அதனால், இயலும்போதெல்லாம் அவரும் சேனையுடன் போருக்குச் செல்லுவது வழக்கம். போரிலன்றி நோயாலும் மூப்பாலும் இறக்கும் அரசர் வாள்போழ்ந்தடக்கப் பெறுவர். அதன் இயல்பை,

"நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி

மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த

நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென

வாள்போழ்ந் தடக்கல்

""

(புறம். 93:5-11)

என்னும் புறப்பாட்டுப் பகுதியால் அறிக. சங்கக் காலத்திற்குப் பிற்காலத்தில், வாள்போழ்ந்தடக்கல் விடப்பட்டது.

போரிற் பெற்ற புறப்புண் நாணியும், புதல்வர் தன்னொடு பொரவருகை நாணியும், பிறவகையில் மானக்கேடு நேர்ந்தவிடத்தும், உலகப்பற்றைத் துறந்தவிடத்தும், அரசர் ஊருக்கு வடக்கில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பர். அது வடக்கிருத்தல் எனப்படும். பகைவரால் சிறைப்பட்டிருந்து உண்ணாதிறத்தலும் வடக்கிருத்தலின் பாற்படும்.

வாழ்நாளிறுதியில், அரசாட்சியை இளவரசனிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டிற்குச் சென்று தவஞ்செய்தல், ஒரோவோர் அரசன் மேற்கொண்ட செயலாகும்.