உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசர் முடிவு

129

அரசர்க்குப் பிறப்பினும், இறப்பே சிறப்பாதலால், கொற்ற அடைமொழியில்லாத அரசரெல்லாம், அவர் இறந்த இடப்பெய ரால் வேறுபடுத்திக் கூறப்பட்டனர்.

அரசரிறந்தபின், அவருடம்பைத் தாழியாற் கவித்தலும், தாழியாற் கவித்துப் புதைத்தலும், வெறுமனே புதைத்தலும், முற்கால வழக்கம்; எரித்தல் பிற்கால வழக்கம். அரசருக்கு இறுதிச் சடங்கியற்றல் பள்ளிபடுத்தல் (பள்ளிபடை) என்றும், அவர் நினைவுக்குறியாக எழுப்பப்படுங் கட்டடம் பள்ளிப்படைக் கோயில் என்றும் பெயர்பெறும்.

அரசக்குடி முடிவு: முத்தமிழரசரும் தமிழாலும் மணவுற வாலும் ணைக்கப்பட்டு ஒற்றுமையாயிருந்த வரை, அசோகப் பேரரசனாலும், அவரை அசைக்க முடியவில்லை. சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், தமிழ் பேணாமை ஒற்றுமையின்மை குலப்பிரிவினை முதலிய காரணங்களால், முத்தமிழ் நாடும் மூவேறு பிரிந்து வலிமை குன்றிப்போய்ச் சோழபாண்டிய நாடுகள் முதலாவது 14ஆம் நூற்றாண்டில் தில்லி மகமதியப் படைகட்கும் பின்பு 16ஆம் நூற்றாண்டில் விசயநகர வடுகப் படைகட்கும் எளிதாய் இரையாயின. பாண்டிநாட்டு வலிமை அதன் தாயப் போர்களாலும் தேய்ந்து மாய்ந்தது. இறுதிப்பாண்டியன் கி.பி. 1652 வரை இருந்தான்.

சேரர் குடியில் இறுதியாக விருந்த அரசர் வலிமை யற்றவரா யிருந்ததினால், சேரநாடானது. வேணாடு (திருவிதங்கோடு) கொச்சி கோழிக்கோடு கோலத்துநாடு முதலிய பல சிறு தனியரசுகளாகப் பிரிந்துபோனதுடன், 17ஆம் நூற்றாண்டில் வடசொற் கலப்பால் மலையாள நாடாகவும் திரிந்துவிட்டது.

ங்ஙனம்,படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வந்தவை யெனப் பாராட்டப்பெற்ற மூவேந்தர் குடிகளும், 17ஆம் நூற்றாண்டி டையில் முடிவுற்றன.