உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சீமையராட்சி வகைகள்

135

சீமை என்பது,

3.சீ மையராட்சி வகைகள்

(1) நகரச் சீமை (City State) (2) னச் சீமை (Nation state) (3) தேயச் சீமை (Country state)

(4) கூட்டுச்சீமை (Federal State)

என நால்வகையாகக் கூறப்படும். ஒரே பேரூராயிருப்பது, அல்லது ஒரே நகரமும் அதனைச் சார்ந்த சிற்றூர்களும் சேர்ந்தது நகரச்சீமை; ஒரேயின மக்கள் வாழும் நாட்டுச் சீமை இனச்சீமை; பல இனமக்கள் வாழும் நாட்டுச் சீமை தேயச் சீமை; பல நாடுகள் சேர்ந்தது கூட்டுச் சீமை.

சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றும் ஓரின மக்களையே கொண்டனவாயும், வெவ்வேறு அரசின்கீழ்ப்பட்டனவாயும் இருந்த தினால், அவற்றை ஆங்கில நிலச்சீமை (Territorial State) என அழைக்கலாம்.

அகப்பொருட் செய்யுட் கிளவித்தலைவர், வெற்பன் குறும் பொறைநாடன் ஊரன் துறைவன் விடலை எனக் குறுநிலத் தலைவராகவும் தனியூர்த் தலைவராகவுமே குறிக்கப் பெறுவதால், சேர சோழ பாண்டியவரசுகள் தோன்றுமுன் நகரச் சீமைகளே தமிழகத்தி லிருந்தன எனக் கொள்ள இடமுண்டு.

அரசு அல்லது அரசியல் என்பது,

(1) கோவரசு (Monarchy)

(2) குடியரசு (Democracy)

(3) சீரியோரரசு(Aristrocracy)

என மூவகைப்படும்.

கோவரசை முடியரசு என்றுங் கூறலாம். முத்தமிழரசுங் கோவரசாகும். பிற்காலத்தில் பார்ப்பனச் செல்வாக்கு மிக்கிருந்ததி னால், அதை ஒருவகைப் பார்ப்பனச் சீரியோரரசு (Brahmin Aristocracy)

என்னலாம்.