உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

பழந்தமிழாட்சி

தமிழ்க்கோவரசு பெரும்பாலும் செங்கோலாட்சியாகவும் (Righteous Government) சிறுபான்மை கொடுங்கோலாட்சியாகவும் (Des- potic Government) இருந்தது. இரண்டும் முற்றதிகாரக் கோவரசே (Ab- solute Monarchy). நிலைத்த ஆட்சி (Stable Government) பொறுப்பாட்சி (Responsible Government) என்னுந் தன்மைகள் செங்கோலாட்சிக் கிருந்தன.

சிற்றரசர் நாடுகட்கெல்லாம் வழங்கப்பட்டிருந்தது.

தன்னாட்சி

(Autonomy)

இற்றை அரசியல் நூல் (Politics) வகுக்கும் சீமைப் பாகுபாட் டின்படி, தமிழ்ச் சீமைகளின் வகைமையைக் கூறின், நெகிழும் சட்டமுறைமையும் (Flexible Constitution) தேர்தல் பெறாக் கருமச் சுற்றமும் (Non-elective Executive), சட்ட நீதியும் (Rule of Law), கொண்ட தாராளத் (Liberal) தனிச் சீமை (Unitary State) என்னலாம். பிற்காலத்தில் ஆரியக் குலப்பிரிவினையால் ஏற்பட்ட குலவாரி நீதியை, ஆள்வினை நீதி (Administrative Law) என்னலாம்