உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேத்தியல் எழுத்தும் நூல்களும்

137

4. வேத்தியல் எழுத்தும் நூல்களும்

எழுதப்பட்ட அரசவாணைக்குத் திருவோலை, திருமுகம் நீட்டு, ஆணத்தி எனப் பல பெயருண்டு. அரசன் கையெழுத்திற்குத் திருவெழுத்து என்றும், அவன் கையெழுத்திடுதற்குத் திருவெழுத்துச் சாத்துதல் என்றும் பெயர்.

அரசனையும், அரசனுடைய உறுப்புகள் சின்னங்கள் முதலிய வற்றையும், புகழ்ந்து கூறும் எழுத்தீடும் செய்யுளும் நூல்களும் வருமாறு:-

(1)

நாண்மங்கலம்

அரசனுக்கு இத்துணை யாண்டுகள் சென்றன என்றெழுதுவதும், செங்கோலரசனின் பிறந்த நாளைச் சிறப்பித்துக் கூறுவதும், நாண்மங்கலம் எனப்படும்.

(2)

வளமடல் :

பெண்ணின்பமே சிறந்ததெனக்

கொண்டு, அரசனின் இயற்பெயர்க்குத் தக்க எதுகை கலிவெண்பாவாற் பாடுவது வளமடல்.

(3)

வரக்

உலா: அரசன் தேர்மறுகில் வெற்றியுலா வரக்கண்ட எழுபருவ இளமகளிரும், அவனைக் காதலித்ததாகக் கலிவெண் பாவாற் பாடுவது உலாவாகும்.

(4) மெய்க்கீர்த்தி : அரசனுடைய மெய்க்கீர்த்திச் செயல்களை அகவலாற் பாடுவது மெய்க்கீர்த்தி.

(5) மெய்க்கீர்த்தி மாலை: அரசனுடைய மெய்க்கீர்த் தியைப்பற்றிய பல செய்யுள்கள் பாடுவது மெய்க்கீர்த்தி மாலை.

(6) தானை மாலை: கொடிப்படையை அகவலாற் பாடுவது தானை மாலை.

(7) வரலாற்று வஞ்சி: அரசன் படையெடுத்துச் செல் வதைப் பாடுவது வரலாற்று வஞ்சி.

(8) செருக்கள வஞ்சி: செருக்களத்தில் நிகழ்ந்த போரைப் பற்றிப் பாடுவது செருக்களவஞ்சி.

இங்ஙனம் பிற புறத்திணைகளைப்பற்றிப் பாடுவனவும் அவ்வ திணையாற் பெயர்பெறும்.