உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசிய லுறுப்புகள்

7

நாட்டிலும் கோயில் வினைஞராகவும் அரசியல் வினைஞராகவும் புலவராகவும் பெருமக்கள் தூதராகவும் அமர்ந்திருந்தனர்.

மருதம் என்னும் அகநாட்டிலும் நெய்தல் என்னுங் கரை நாட் டிலுமுள்ள கோநகரங்களில், வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே, யவனர் (கிரேக்கர், ரோமர்) சோனகர்(அரபியர், துருக்கர், மிலேச்சர்) முதலிய மேனாட்டாரும்; அவந்தியர், மகதர், குச்சரர், மராட்டர் முதலிய வடநாட்டாரும்; ஈழவர், நாகர் முதலிய கீழ் நாட்டாரும்; கம்மியம் வணிகம் அரசவூழியம் முதலிய பற்பல வினைமேற் கொண்டு, அவரவர்க்குரிய சேரியில் பதிவாயிருந்து வந்தனர்.

(3) அரசியல் : அரசியல் என்பது,

(1) சட்டம் அமைப்போர் (Legislature) (2) கருமம் ஆற்றுவோர் (Executive)

(3) நடுத்தீர்ப்போர் (Judiciary)

என்னும் முத்துறை அதிகார வகுப்புகளை உறுப்பாகக் கொண்டது. பண்டைத் தமிழகத்தில், இம் முத்துறை அதிகாரங்களும் பிரிக்கப் படவில்லை. அதனால், சட்டம் அமைத்தற்கென்று இக் காலத்திற் போல் ஒரு தனி அவை இருந்ததில்லை. அரசனும் அவனுடைய துணையதிகாரிகளுமே, இம் மூவகை வினைகளையும் புரிந்து ம் வந்தனர். சிற்றரசனாயினும் பேரரசனாயினும் சட்டம் அமைக்கும் அதிகாரம் அரசனிடத்திலேயே இருந்தது. அரசனுக்கும் குடிகளுக் கும் தீங்கு விளைக்காத பழைமையான மரபு வழக்கங்களெல்லாம் அப்படியே தழுவப்பெற்றன. அவ்வப்போது தேவைப்பட்ட திருத் தங்களும் புது விதிகளுமே அரசனால் ஆக்கப்பட்டன.

(4) கோன்மை: கோன்மையானது,ஒரு நாடு பிற நாட்டைச் சாராது, தனக்குரிய சட்டங்களைத் தானே அமைத்துக்கொள்ளும் உரிமை. இவ் வுரிமை மூவேந்தருக்கும் தனித்தனி யிருந்ததால், அம் மூவர் நாடு முழு நிறைவுற்றவை யாகும்.

கோன்மை என்பது ஒரு நாட்டிற்குரிய தனியுறுப்பாகப் பண்டைக்காலத்தில் உணரப்படாமையால், திருவள்ளுவர் ஏனை மூன்றுறுப்புகளையும் ஆறாக வகுத்து,

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

""

குறள் (381)

என்று கூறினார். அவர் கூறும் ஆறனுள், குடி என்பது குடிகள்; கூழ் (பொருள்) அரண் என்னும் இரண்டும் ஆள்நிலத்தின் பகுதிகள்; அரசன் படை அமைச்சு நட்பு என்னும் நான்கும் அரசியலின் பகுதிகள்.