உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




00

8

சில தமிழ் நூலாசிரியர்,

மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவுந் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்'

பழந்தமிழாட்சி

என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளை யொட்டிப் பெயர், மலை, நாடு,ஆறு,நகர், முரசு, தமிழ், கொடி, குதிரை, மாலை என்னும் பத்தும் அரசவுறுப்புகள் எனக் கூறுவர்.

பாட்டியல் இலக்கணியர், இவற்றுள் பெயர் தமிழ் என்னும் இரண்டை நீக்கி அவற்றுக்குப் பதிலாக. யானை ஆணை என்னும் இரண்டைச் சேர்ப்பர்;

வ்வி

இவ் விரு சாராரும் கூறுபவற்றுள் பெரும்பாலன அரசச் சின்னங்களும் ஆள்நிலப் பகுதிகளுமாதலின், அவை இற்றை அரசியல் நூற்படி அரசவுறுப்புகளாகா என அறிக.