உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

ஆள்நிலப் பிரிவுகள்

முத்தமிழ் நாடுகளும், ஆள்வினைப் பொருட்டு, சிறியதும் பெரியதுமான பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

மூவேந்தர் முழுநாடுகளும் தனித்தனி பெருநாடு எனப்பட் டன: சோழப் பெருநாடு பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல ஊர்களாக வும் பிரிக்கப்பட்டிருந்தன. சிற்றூராயின் பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும், ஊர் என்னும் அடிப்படை ஆள்நிலவுறுப் பாக வகுக்கப்பட்டிருந்தன. தனியூராகவுள்ள பேரூர்க்குத் தனியூர் என்றும், கூட்டூரின் பகுதியாகவுள்ள சிற்றூர்க்குப் பற்று அல்லது குறைப்பற்று என்றும் பெயர். பல பற்றுகள் சேர்ந்த கூட்டூர் அதிலுள்ள முதன்மையான சிற்றூராற் பெயர் பெற்றது. தனியூரான பேரூராயினும் குறைப்பற்றான சிற்றூராயினும், பார்ப்பனத் தலைமையுள்ள ஊர்களெல்லாம் சதுர்வேதிமங்கலம் என்னும் பொதுப்பெயரைக் கொண்டிருந்தன. அப் பெயர் உத்தரமேருச் சதுர்வேதிமங்கலம் என ஊர்ப்பெயரீறாக வழங்கிற்று.

முதலாம் இராசராசன் காலத்தில், (கி.பி. 985-1014) சோழப் பெருநாடு, 9 வளநாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பகுக்கப்பட்டி ருந்தது. அவ் வொன்பது வளநாடுகளும் அவ்வரசனின் விருதுப் பெயர்களையே சிறப்புப் பெயர்களாகப் பெற்றிருந்தன. அவையாவன: 1. இராசேந்திர சிங்கவள நாடு 2. இராசாச்ரய சிங்கவள நாடு

3. நித்த விநோத சிங்கவள நாடு

4. க்ஷத்திரிய சிகாமணி சிங்கவள நாடு

5. உய்யக்கொண்டான் வளநாடு 6. அருண்மொழித்தேவ வளநாடு

7. கேரளாந்தக வளநாடு