உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆள்நிலப் பிரிவுகள்

11

முதலாம் இராசராசச் சோழனின் பேரரசில் அடங்கிய மண்டலங் களும், அவற்றின் சிறப்புப் பெயருமாவன:

நாட்டுப்பெயர்

(1) சோணாடு

(2) பாண்டிநாடு

(3) சேரநாடு

(4) கொங்குநாடு

(5) தொண்டைநாடு

(6) கங்கபாடி

(7) நுளம்பபாடி

(8) வேங்கைநாடு

(9) இலங்கை

மண்டலப்பெயர்

சோழமண்டலம்

இராசராசப் பாண்டிமண்டலம்

மலை மண்டலம்

அதிராசராசமண்டலம்

சயங்கொண்ட சோழமண்டலம் முடிகொண்ட சோழமண்டலம் நிகரிலிச் சோழமண்டலம்

வேங்கை மண்டலம்

மும்முடிச் சோழமண்டலம்

இவற்றுள், சோணாடு தன்னளவில் ஒரு பெருநாடாகவும், பேரரசு கள் ஒரு மண்டலமாகவும் இருந்ததென அறிக.

ஓர் அரசன் அல்லது பேரரசன், தன் ஆட்சியில், தன் ஆள்நிலப் பிரிவுகட்கு அல்லது பேரரசைச் சேர்ந்த மண்டலங்கட்குத் தன் முன் னோர் இட்ட பெயரையும் வகுத்த அளவையும் மாற்றிக் கொள்வ துண்டு. முதலாம் குலோத்துங்கச் சோழன், அதிராசராச மண்டலத் திற்குச் சோழகேரள மண்டலம் என்றும், க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டிற்குக் குலோத்துங்கச் சோழவளநாடு என்றும் பெயர் மாற்றினான். அதோடு, இராசேந்திர சிங்கவள நாட்டை ரு பிரிவாக்கி, மேலைப் பிரிவிற்கு உலகுய்ய வந்த வளநாடு என்றும், கீழைப் பிரிவிற்கு விருதராச பயங்கர வளநாடு என்றும் பெயரிட்டான்.

மூவேந்தர் ஆள்நிலத்துள்ளும் அடங்கிய சிற்றரச நாடுகள், அவற்றின் அளவிற்கும் பெருமைக்கும் தக்கவாறு, ஏதேனுமொரு மேல்வகைப் பிரிவாக வகுக்கப்பெற்றிருந்தன.

அரசனின் தலைநகர் அரசிருக்கை, கோநகர், படைவீடு என்னும் பெயர்களுள் ஒன்றால் அழைக்கப்பெற்றது. இவற்றுள், அரசிருக்கை என்பது அரசன் நிலையாக வாழும் நகரையே குறிக்கும். கோநகர் என்பது அரச குடும்பத்தினர் இருந்து ஆளும் நகரையும், படைவீடு என்பது படை நிறுத்தப்பெற்று அரசன் நாடு காவற் சுற்றுப்போக்கில் தங்கக்கூடிய நகரையும் குறிப்பதுமுண்டு.

தலைநகர்கள், அவற்றின் பெருமைபற்றிப் பேரூர் அல்லது மாநகர் என்றும், ஆரவாரம்பற்றிக் 'கல்லென் பேரூர்' என்றும்,