உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

பழந்தமிழாட்சி பழைமையான வெற்றியுடைமைபற்றிப் 'பழவிறன் மூதூர்' என்றும், காவல்மிகுதிபற்றிக் 'கடிநகர்' என்றும் புலவராற் சிறப்பித்துக் கூறப்பெறும்.

முத்தமிழ் அரசருள், ஒவ்வொருவர்க்கும் அகநாட்டுத் தலைநகர் ஒன்றும் கரைநாட்டுத் தலைநகர் ஒன்றுமாக இவ்விரு தலைநகர் இருந்தன. இவற்றுள், முன்னது ஆட்சி வசதியும், பின்னது வணிக வசதியும்பற்றியவை. கரைநாட்டுத் தலைநகரெல்லாம் பட்டினம் என்னும் பொதுப்பெயருடையன.

தலைநகரும் பிறநகருமான பேரூர்களெல்லாம் பல சேரி களாகப் பாகுபட்டிருந்தன. ஒவ்வொரு குலத்தாரும் அல்லது வகுப் பாரும் சேர்ந்து வாழும் தெரு அல்லது தெருத்தொகுதி சேரி எனப் பட்டது.

"ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும்"

(983)

தெருப்பேச்சைத்

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. தொல்காப்பியர் 'சேரிமொழி' என்பர். உறையூரில் ஏணிச்சேரி என்பது ஒரு பகுதி. சேரிகள் பார்ப்பனச்சேரி, கம்மாளச்சேரி, தளிச் சேரி, பரத்ததையர் சேரி, பறைச்சேரி என அவ்வவ் வகுப்பாற் பெயர் பெற்றிருந்தன. தளிச்சேரி என்பது கோயிற்பணிப் பெண்டுகள் வாழுமிடம். ஒரு நகரின் மூலப் பழைமையான சேரிக்கு அடிச்சேரி என்றும், கோட்டை வாயிலுக்கு எதிராக இருக்கும் சேரிக்குத் தலைவாய்ச்சேரி என்றும் பெயர். பார்ப்பனச்சேரிக்குப் பிற்காலத்தில் அக்கிரகாரம் எனத் தனிப்பெயர் வழங்கிற்று. சேரி, பாடி எனவும்படும்.

ஒரு பேரூரில் உள்ள சேரிகள், அரச அரசியரின் பெயர்களைச் சிறப்புப் பெயராகப் பெற்றிருப்பதுமுண்டு. தஞ்சை மாவட்டத் தைச் சேர்ந்த திருக்களித் திட்டையில்,அருண்மொழித் தேவச்சேரி, சனநாதச்சேரி, நித்தவிநோதச்சேரி, இராசராசச்சேரி, நிகரிலிச் சோழச்சேரி, அழகிய சோழச்சேரி, சிங்களாந்தகச்சேரி, குந்தவ்வைச் சேரி, சோழகுலசுந்தரிச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி எனப் பதினொரு சேரிகள் இருந்தன.

கடல்கோளாலும் பகைவராலும் தலைநகர்க்கு அழிவு நேர்ந்த விடத்தும், பழந்தலைநகர் வசதியற்ற விடத்தும், பிறிதொரு நகரைத் தலைநகராக்கிக்கொள்வதும் புதிய தலைநகரை அமைத்துக் கொள்வதும் தமிழரசர் வழக்கம். இவ்வகையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தலைநகர் அமைவதுண்டு. பாண்டியர்க்குத் தென்மதுரை மணலூர் மதுரை என்பன அகநாட்டுத் தலைந கராகவும், கவாடம் (அலைவாய்), கொற்கை, காயல் என்பன கரை