உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆள்நிலப் பிரிவுகள்

13

நாட்டுத் தலைநகராகவும்; சோழர்க்கு உறையூர் கருவூர் அழுந்தூர் குடவாயில் திருவாரூர் தஞ்சை ஆயிரத்தளி (நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம்), கங்கைகொண்ட சோழபுரம் என்பன அகநாட்டுத் தலைநகராகவும், புகார் (காவிரிப்பூம்பட்டினம்), நாகபட்டினம் என்பன கரைநாட்டுத் தலை நகராகவும்; சேரர்க்குக் கருவூர் என்பது அகநாட்டுத் தலைநகராகவும், வஞ்சி கொடுங் கோளூர் காந்தளூர்ச்சாலை என்பன கரைநாட்டுத் தலைநகராகவும் இருந்திருக்கின்றன.