உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3

அரசர் பாகுபாடு

சிற்றரசர் தலைமையரசர் பேரரசர் எனத் தமிழரசர் முத்திறப் பட்டிருந்தனர். இம் முத்திறத்தாரும் முறையே, குறுநிலவரசரும் பெருநிலவரசரும் பலநிலவரசரும் ஆவர். சிற்றரசர்க்கு மன்னன் என்னும் பெயரும், தலைமையரசர்க்கு வேந்தன் கோ (கோன்) என்னும் பெயரும், மரபாக வுரிய. இதை,

"கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர்

என்னும் தனிப்பாடற் செய்யுளடியாலும்,

"வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தே வேம்பே ஆரென வரூஉம்'

99

(1006)

என்னும் தொல்காப்பிய அடிகளாலும், அறியலாம். பேரரசரைப் பெருங்கோ அல்லது மாவேந்தன் என்னும் பெயரால் அழைக்க லாம்.

கோ என்னும் பெயர் வேந்தருக்கு மட்டுமன்றி, அவருக்கடங்கி அவர் நாட்டுள் ஒவ்வொரு பகுதியை ஆளும் அவர் தாயத்தார்க்கும், சிற்றரசருள் பெரியவர்க்கும் வழங்கும். சேரன் செங்குட்டுவனின் தாயத்தாரான இரும்பொறை மரபினருள் ஒருவனான சேரமான் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையும், சிற்றரசருள் ஒருவனான விச்சிக்கோவும், கோவென்று பெயர் கொண்டிருந்தமை காண்க. வேந்தன் என்னும் பெயரோ, என்றும் தலைமையரசனையே குறிக்கும்.

தமிழகச் சிற்றரசர், எயினர் வேட்டுவர் முதலிய பாலைநிலக் குடிகளின் தலைவராகிய குறும்பரசரும், சிறுமலைக் கிழவரும், உழுவித்துண்ணும் வேளாண் குடியினரான வேளிரும்; படைத்தலை வரும், அரச குடும்பத்தினரும், அரசியற் பேரதிகாரிகளுமாகப் பல வகையர்; தொல்வரவினர் புதியர் என இருபாலார்; ஊர்க்கிழவர் முதல் மண்டலத் தலைவர்வரை பல திறத்தார்.