உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசர் பாகுபாடு

15

கொங்கர், கோசர், கங்கர், கட்டியர், பங்களர், துவரைவேளிர், அதிகர், ஆவியர் என்னும் பலகுடிச் சிற்றரசர் சேரனுக் கடங்கிய வராகவும்; பொத்தப்பிராயர், காடவராயர், பல்லவர் (பல்லவ தரையர்), தொண்டையர், சம்புவராயர், இலாடராயர், மலைய மானர் (சேதிராயர்), வாணகோவரையர், முனையரையர் (முனைய தரையர்), ஓய்மானர், முத்தரையர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பலகுடிச் சிற்றரசர் சோழனுக் கடங்கியவ ராகவும்; ஆயர் (ஆய்குடியர்), களப்பாளர் (களப்பிரர்) முதலிய சிலகுடிச் சிற்றரசர் பாண்டியனுக் கடங்கியவராகவும்; பல தலை முறையினராயிருந்து வந்தனர். கொங்குமண்டலம் சோழப் பேரரசிற் குட்பட்ட பிற்காலத்தில், கொங்கர் கங்கர் நுளம்பர் முதலியோர் சோழருக்கடங்கியவராயினர்.

இனி, சிற்றரசர்க்கடங்கிய கீழ்ச் சிற்றரசருமுண்டு. வேங்கட மலையைச் சார்ந்த ஒரு சிறு நாட்டுத் தலைவனான கரும்பனூர் கிழானும், வேங்கடமலைத் தலைவனான புல்லியும், பல்குன்றக் கோட்டத் தலைவனான நன்னனும், தொண்டைமானுக்கடங்கிய கீழ்ச் சிற்றரசர்,

66

'அடங்கா மன்னரை யடக்கு

மடங்கா விளையுள் நாடுகிழ வோயே"

(புறம்.199)

என்று விச்சிக்கோ கபிலராற் பாடப்பெற்றிருப்பதால் அவன்கீழ்ப் பல மன்னரிருந்தமை அறியப்படும்.

இனி, கடைச்சங்க காலத்தில் அகுதை, எயினன், எருமையூரன், ஏறைக்கோன், ஏனாதி திருக்கிள்ளி, ஓரி, கடியநெடுவேட்டுவன், குமணன், கொண்கானங்கிழான், சிறுகுடிகிழான் பண்ணன், தழும்பன், தாமான் தோன்றிக்கோன், திதியன், நள்ளி, நாலைகிழவன் நாகன், நாஞ்சில் வள்ளுவன், கந்தன், பழையன், பாரி, பிட்டங் கொற்றன், மல்லிகிழான் காரியாதி, மூவன், வல்லார்கிழான் பண்ணன், வெளிமான், வேங்கைமார்பன் என அரசகுடி கூறப்படாத பற்பல சிற்றரசரும் கீழ்ச் சிற்றரசரும் தமிழ்நாடு முழுமையு மிருந்தனர்.

தமிழரசருள், சேர சோழ பாண்டியராகிய முக்குடியரசரும், வேந்தர் என்று கூறப்படும் தலைமையரசராவர். முதற்காலத்தில் அவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. இதனாலேயே, அவர் வேந்தர் எனப்பட்டார். வேந்தன் என்னும் பெயர் வேய்ந்தோன்' என்பதன் மரூஉ. வேய்தலாவது முடியணிதல். முடியணியும்

2. கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றை வேந்தன் என மருவியிருத்தல் காண்க.